
டீ பிரியர்கள் இந்த உலகத்தில் ஏராளம். டீ ஒரு பானம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. பலருக்கு, ஒரு நாளை டீ இல்லாமல் ஆரம்பிப்பதோ அல்லது முடிப்பது என்பதோ முடியாத காரியம். டீ குடிக்கும்போது, கூடவே ஒரு ஸ்னாக்ஸ் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். குறிப்பாக, பிஸ்கட் டீ காம்போ ரொம்ப பேமஸ். ஆனால், இந்த பழக்கம் உண்மையிலேயே நல்லதா? டீ குடிக்கும்போது என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம்.
டீ குடிக்கும்போது பிஸ்கட் சாப்பிடுவது பலருக்கு பிடித்தமான விஷயமாக இருக்கலாம். ஆனா, இது உடலுக்கு அவ்வளவு நல்லது இல்லை என்று நிபுணர்கள் சொல்றாங்க. டீ கூட பிஸ்கட் சேர்த்து சாப்பிடும்போது, அது குடல் பிரச்சனைகளை உண்டாக்கலாம். செரிமானம் சரியா நடக்காம போகலாம். அது மட்டும் இல்லை, உடல் எடை போடனும்னு நினைக்காம, சும்மாவே வெயிட் ஏற ஆரம்பிச்சுடும்.
இப்போ நிறைய பேரு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதுன்னு லெமன் டீ குடிக்கிறாங்க. ஆனா, இதுவும் சில நேரங்களில் பிரச்சனை பண்ணலாம். டீயில இருக்கிற சில கெமிக்கல்ஸ், லெமன்ல இருக்கிற சிட்ரிக் ஆசிடோட சேரும்போது, சிலருக்கு வயிற்று உபாதைகள் வரலாம். அப்புறம், டீ கூட எண்ணெய் பலகாரங்கள் – பக்கோடா, முறுக்கு, பஜ்ஜி – இதெல்லாம் நிறைய பேரு விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா, இதுவும் உடம்புக்கு நல்லது இல்லையாம்.
அது மட்டும் இல்லைங்க, அசைவ உணவுகள், கொண்டைக்கடலை மாதிரி தானியங்கள், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ், அப்புறம் ரொம்ப கூலிங்கான ஐட்டம்ஸ் இதெல்லாம் டீ கூட சேர்த்து சாப்பிடக்கூடாதாம். அப்போ டீ கூட என்னதான் சேர்த்துக்கிறதுன்னு நீங்க கேட்கலாம். டீயில இஞ்சி, சர்க்கரை, ஏலக்காய், பட்டை, துளசி இதெல்லாம் தாராளமா சேர்த்துக்கலாம். இது டீயோட சுவையையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
டீ குடிப்பது ஒரு மகிழ்ச்சியான பழக்கம். ஆனா, டீ குடிக்கும்போது என்ன சாப்பிடுறோம்னு கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க. தவறான உணவுப் பழக்கம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கலாம். டீ டைம் ஸ்நாக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் ஸ்மார்ட்டா யோசிச்சு, ஹெல்த்தியான சாய்ஸ் பண்ணுங்க. டீயும் குடிங்க, உடம்பையும் பாத்துக்கோங்க.