
கண்களின் கீழ் கருவளையம் ஏற்படுவது உங்களுக்கு சிறுநீரகம், கல்லீரல், பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி மற்றும் கேஸ்ட்ரிக் போன்ற பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். அதை எப்படி அறியலாம் என்பதை காண்போம்.
சிறுநீரகம் :
கண்களின் கீழ் ஏற்படும் கருவளையம் நம் சோர்வையே வெளிக்காட்டுகிறது. சிறுநீரகம் நலமின்றி இருப்பதை உங்கள் சருமம் மற்றும் கண்கள் காட்டிக் கொடுக்கின்றன. சிறுநீரகம் சரியாக செயல்படாதபோது உடலில் நச்சுக்கள் சேர்ந்து கண்களில் கருவளையத்தை ஏற்படுத்தும். ஆனால் கருவளையம் ஏற்பட்டால் சிறுநீரக பாதிப்பு தான் என்றில்லை.
இரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பது, சரியான பிராணவாயு முகத்திற்குச் செல்லாமல் இருப்பது கூட கருவளையத்தை உண்டாக்கும். நல்ல தூக்கம், நல்ல நீரேற்றம் போன்றவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தேவையாக உள்ளது. சமச்சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியும் சக்தி அளிக்கும்.
கல்லீரல் :
கண்ணின் கீழ் கருவளையம் என்பது கல்லீரல் பிரச்னைகள் உள்ளன என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். பலவீனமான கல்லீரல் உடல் நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் போகும் போது கருவளையம் ஏற்படலாம். கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு கருவளையம் ஏற்படுவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டால் மெடபாலிசம் மற்றும் ஆக்சிஜன் தடை ஏற்பட்டு சோர்வால் கண்ணில் கருவளையம் ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவ சிகிச்சையோடு நல்ல உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் இதை தடுக்கலாம். புரதம் நிறைந்த மீன், முட்டை மற்றும் பால் பொருட்கள் கல்லீரலை பாதுகாக்கும்.
மாதவிடாய் சுழற்சி முறையற்று இருப்பது :
கண்ணின் கருவளையம் முறையற்ற மாதவிடாய் சுழற்சியால் ஹார்மோன்கள் பாதிப்படைவதாலும் ஏற்படலாம். பிக்மேண்டேஷன் பிரச்சனையால் பாதிப்பு ஏற்படலாம்.
மாதவிடாய் தாமதமாக வரும் போது இரத்த ஓட்டம் தடைபடுவதாலும், பிராணவாயு குறைவதாலும் கருவளையம் ஏற்படுகிறது. ஆகவே பெண்கள் மாதவிடாய் ஒழுங்கின்மைமை சரி செய்ய வேண்டும். மூலிகை தேனீர், எளிய உடற்பயிற்சி மற்றும் உடல் நீரேற்றமாக வைத்து இப்பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்.
கேஸ்ட்ரிக் (Gastritis) :
செரிமானமின்மை காரணமாக கண்களில் கருவளையம் ஏற்படலாம். வயிற்றில் ஏற்படும் அழற்சியால் ஊட்டச்சத்து உறிஞ்சப்படும். அதனால் உடல் பாதிக்கப்பட்டு அது சோர்வை ஏற்படுத்தி கண்ணில் கருவளையத்தை ஏற்படுத்தும். அதிக காரம், எண்ணெய் மற்றும் அமில உணவுகளைத் தவிர்த்து ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்ள செரிமானம் சீராகி கருவளையத்தைத் தடுக்கும். வயிற்றுப் பிரச்னைகளை நீக்குவதால் கருவளையமும் வராமல் தடுக்கப்படும்.
பழங்கள், காய்கறிகள், புரதம் மற்றும் முழு தானியங்கள் நல்ல பலன் தரும். நடைப்பயிற்சி, யோகா மற்றும் நீச்சல் பயிற்சிகள் மூலம் இரத்த ஓட்டம் சீராகும். இயற்கையான முறையில் வெள்ளரித்துண்டை கண்கள் மீது வைப்பது, தக்காளிக்கூழ் மற்றும் உருளைக்கிழங்கின் ஜூஸ் இவற்றை பயன்படுத்தி கண்ணின் கருவளையத்தை தடுக்கலாம்.