
கண்களின் கீழ் ஏற்படும் கருவளையம் முக அழகைக் கெடுக்கும். அதை நீக்க இயற்கை வழிகளைக் காண்போம்.
கண்களுக்கு கீழ் சிறு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலம் கரு வளையத்தைக் குறைக்கலாம். ஐஸ் கட்டிகளை நல்ல சுத்தமான துணியில் வைத்து அதை ஒரு குளிர்விக்கப்பட்ட ஸ்பூனால் கண்களின் கீழ் அழுத்தம் கொடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை 5லிருந்து10 நிமிடங்கள் செய்யலாம்.
வெள்ளரிக்காயில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் மற்றும் இயற்கையான ஆஸ்ட்ரின்ஜென்ட் பண்பு உள்ளதால் கண்களை மூடி அதன்மேல் வெள்ளரித்துண்டுகளை வைக்க சிறந்த பலன் கிடைக்கும்.
ப்ளாக் மற்றும் க்ரீன் டீ பாகுகள் ((bags) சுருங்கிய ரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் கேஃபின் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்தால் குளிர்விக்கப்பட்ட டீ பாகுகளை கண்கள் மீது பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைக்க கருவளையம் நீங்கும்.
ஆல்மண்ட் மற்றும் ஈ ஆயில்கள் கண்களை நீரேற்றத்துடன் வைக்க உதவும். வைட்டமின் ஈ சத்து நல்ல பாதுகாப்பைத்தரும். ஆல்மண்ட் ஆயிலுடன் ஒருதுளி ஈ ஆயில் சேர்த்து இதைக்கொண்டு கண்களைச் சுற்றி மசாஜ் செய்யவும். இரவு அப்படிச் செய்து மறுநாள் கழுவ கருவளையம் மறையும்.
தக்காளியில் லைகோபீனும் எலுமிச்சை சாற்றில் ப்ளீச்சிங் பண்பும் உள்ளதால் ஒரு டீஸ்பூன் தக்காளி சாற்றில் அரை டீஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து கண்களைச் சுற்றித் தடவவும். பிறகு கழுவ கருவளையம் நீங்கும். ஆனால் இதை வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே செய்யவும்.
உருளைக் கிழங்கை சீவி சாறு எடுத்து அதை காட்டன். பாட்களில் நனைத்து எடுத்துக் கண்கள் மீது வைக்கவும். பதினைந்து நிமிடங்கள் கழித்துத் கழுவ சிறந்த பலன்தரும். உருளைக்கிழங்கில் பீளீசிங் பண்பு உள்ளது.
கற்றாழை ஜெல்
இது சிறந்த நீரேற்றத்தைத் தக்க வைக்கக்கூடியது. சிறிது கற்றாழை ஜெல்லைக் கண்களைச் சுற்றித் தடவி பிறகு கழுவ சிறந்த பலனைத்தரும். சருமத்திற்கு மிகவும் சிறந்தது கற்றாழை ஜெல்.