மஞ்சள் காமாலையிலிருந்து தற்காப்பு நிவாரணம்!

மஞ்சள் காமாலையிலிருந்து தற்காப்பு நிவாரணம்!

ஞ்சள் காமாலை என்பது உயிர்கொல்லி நோய்களில் ஒன்றாகவும், அதை முற்றிலும் குணப்படுத்த மருத்துவத்தில் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கருதப்படுகிறது. எனவே, இந்நோயை வரும்முன் காப்பதே நலம். இந்நோய் வருவதற்கானக் காரணம், அறிகுறிகள், வந்தபின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

மது அருந்துதல், கல்லீரலின் செயல்பாட்டுக் குறைவால் அங்கு வந்து சேரும் பிலிரூபின் என்னும் உடைந்து போன பழைய ரத்த சிவப்பு அணுக்கள் முறையாக வெளியேற்றப்படாமல் கல்லீரலிலேயே தங்கிவிடுதல், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ஒருவர் உபயோகிக்கும் பொருட்களை மற்றவர் உபயோகிக்கும்போது தொற்று பரவுதல், அசுத்தமான இடங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த பண்டங்களை வாங்கி சாப்பிடுவது, சாக்கடை நீர் கலந்தது போன்ற சுகாதாரமற்ற தண்ணீரைக் குடிப்பது, உடலில் ஏற்பட்டுள்ள மற்ற வியாதிக்கு மருந்து எடுக்கும்போது அதன் பக்க விளைவாக வருவது போன்றவை மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.

வாந்தி, காய்ச்சல், பசியின்மை, பலவீனம், தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுவது, சிறுநீர் நிறத்தில் மாற்றம், வலது பக்க வயிற்றில் வலி ஆகியவை மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது. ஹெபடைட்டிஸ் என்னும் வைரஸில் A, B, C, D & G என்று பல வகை உண்டு. மேற்கூறிய அறிகுறிகள் தோன்றும்போது உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவர் அறிவுரையின்படி ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் செய்து நோயை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பின் ஸ்கேன் எடுத்து எந்தவகை வைரஸ் தாக்குதல் என்றும் கண்டுபிடிக்க வேண்டும். மற்ற மருந்தின் பக்கவிளைவு இதற்கு காரணமென்றால் அந்த மருந்தை மாற்றுவார் மருத்துவர்.

மற்றபடி மஞ்சள் காமாலைக்கு முக்கிய சிகிச்சை என்று பார்த்தால் முழுமையான ஓய்வு மற்றும் உணவுக் கட்டுப்பாடு மட்டுமே எனலாம். இரண்டு மாதம் வரை எண்ணெய், காரம், மசாலா, அதிகளவு புரோட்டீன், கொழுப்பு போன்றவற்றை அறவே இல்லாத உணவுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவை ஐந்து மாதம் வரை உண்ணவே கூடாதது. ஜூஸ், இளநீர் ஆகியவை நன்மை தரும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி என்னும் கீரையை சமைத்து உண்ணலாம். கீழாநெல்லி இலைகளை அதன் அடியில் இருக்கும் காய்களுடன் ஒரு பிடி எடுத்து, மசிய அரைத்து பாலில் கலந்து மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் காலையிலும், மாலையிலும் குடிக்க, நோயின் தீவிரம் குறையும். Liv. 52 என்னும் வைட்டமின் மாத்திரை தினம் ஒன்று போட்டுக்கொள்ளலாம். இந்நோய்க்கான காரணங்களை நன்கு உணர்ந்து, தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து, சுத்தமான, சுகாதாரமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினால் இந்நோயின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com