தினமும் நாம் சாப்பிடும் உப்பில் இத்தனை ஆபத்துகள் இருக்கிறதா? உஷார்!

சோடியம் குறைபாட்டால் ஏற்படும் சோர்வு, அதிகப்படியான உப்பால் உண்டாகும் ரத்த அழுத்தம் மற்றும் பொதுநல மருத்துவர். பிரகதீஷ், MBBS அறிவுரைகள்.
Salt | உப்பு
Salt | உப்புImage Credit: ChatGPT
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on: 

உணவில் முக்கிய பங்கு வகிக்கும் உப்பு சுவைக்கானது மட்டும் தானா? உப்பு இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியுமா? உப்பு அதிகரித்தாலோ,குறைவானாலோ என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒரு நாளைக்கு உப்பின் தேவை எவ்வளவு?

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பர். ஆனால் அதிக உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு எதிரி. உடல் செல்களின் செயல்பாட்டிற்கு உப்பு தேவை. இவை நம் உணவின் மூலமே கிடைத்து விடும். ஒரு டீஸ்பூன் உப்பில் ஏறக்குறைய 2,000 மி.கி சோடியம் இருக்கிறது. இது போக தற்போது நாம் உண்ணும் நொறுக்கு தீனிகள் மற்றும் விரைவு உணவுகளில் இருக்கும் அளவுக்கு மீறிய உப்பும் நமது உடலில் சேருகிறது.

நம் உடலில் போதிய அளவு உப்பு இல்லாது போனாலோ, அதிகமானாலோ பல பிரச்சனைகள் ஏற்படும். சில நேரங்களில் தேவைக்கு குறைவாக உப்பை எடுப்பதால் பெரிதாக பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் சோடியத்தின் அளவு குறையும்போது உடல் சோர்வு, வயிற்றுபோக்கு, வாந்தி, ரத்த அழுத்தம் குறைதல், சிறுநீரக மற்றும் குடல் பாதிப்புகள் ஏற்படலாம்.

ஒரே நாளில் உப்பின் அளவு அதிகமானாலும், அது வியர்வை, சிறுநீராக வெளிப்படும். அப்படி வெளியேறும் போது இயற்கையாகவே நமக்கு தாகம் ஏற்படும். உப்பு அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு அதனால் உடலில் சோடியத்தின் அளவு அதிகமாகும் போது உதட்டில் வெடிப்பு, சிறுநீரக பாதிப்புகள், குடலின் செயல்திறன் குறைதல் போன்றவை ஏற்படும்.

உப்பை குறைத்து சாப்பிட பல நன்மைகள் உள்ளன. வீட்டில் சமைக்கும் போது பாதி அளவு உப்பு, சேர்த்தால் போதுமானது. புடலங்காய், சுரைக்காய், சௌ சௌ போன்ற நாட்டுக் காய்களில் உப்பு சத்து இருப்பதால் உப்பை குறைவாகவோ அல்லது போடாமலேயே சமைக்கலாம். வெளியில் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டாலே உடலில் உப்பின் அளவு அதிகரிக்காது.

Salt | உப்பு
Salt | உப்பு

சிலபேர் நினைக்கக் கூடும். உப்பே தேவையில்லை. நன்றாக குறைத்துக் கொள்வோம் என. யாருமே தவிர்க்க தேவையில்லை. வயதானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் உணவிலும் உப்பு அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

அப்பளம், ஊறுகாய், பொரி, சிப்ஸ், கருவாடு போன்றவற்றை அனைவருமே தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப் பட்ட உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அன்றாட சமையலில் பயன்படுத்தப் படும் உப்புக்கு பதிலாக பொட்டாசியம் குளோரைடு உப்பு சேர்த்து உணவுப் பொருட்கள் என கடைகளில் கிடைக்கிறது. இவை இதயத்துக்கு மிகவும் ஆபத்தானது. பாக்கெட் உணவுகள், துரித உணவுகள் என இவற்றை தவிர்க்க உடலில் அதிக படியான உப்பு சேராது. இந்துப்பு குறைவாக பயன்படுத்தலாம்.

உப்பு அதிகரிக்க இரத்த அழுத்தம் அதிகமாகும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கவனிக்கப்படாத இரத்த அழுத்தம் ஸ்ட்ரோக் மற்றும் பல உடல் நலக்கேட்டை கொடுத்து விடும். எனவே உப்பை குறைப்பது எல்லாவிதத்திலும் உடலுக்கு நன்மை பயக்கும்.

இவை யாவும் மகன் Dr.பிரகதீஷ் MBBS. அடிக்கடி எனக்கு அறிவுறுத்துவதையும் தொகுத்து எழுதியுள்ளேன்.