Intermittent Fasting இருந்தால் மாரடைப்பு வரும்... புதிய ஆய்வு முடிவுகள்! உண்மையா?

intermittent fasting heart attacks
intermittent fasting heart attacks

கடந்த திங்கட்கிழமை சிக்காகோவில் வெளியிடப்பட்ட Intermittent Fasting குறித்த புதிய ஆய்வு முடிவில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது இடைப்பட்ட உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கு 91% வரை வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வறிக்கை வெளியாகி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்றைய காலத்தில் மக்களுடைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைப் பழக்கங்களால் தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்படுவது அதிகமாகிவிட்டது. குறிப்பாக உடற்பருமன் அதிகரித்து விடுவதால், இளைஞர்களுக்கு அதைக் குறைப்பது பெரும் பாடாக உள்ளது. எனவே உடல் எடையைக் குறைப்பதற்கு பல யுத்திகள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒரு முறைதான் Intermittent Fasting. 

Intermittent Fasting: இடைப்பட்ட உண்ணாவிரதம் என்பது நாம் உணவு உண்ணும் நேரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் அதிக இடைவெளி கொடுக்கும் ஒரு உணவு முறையாகும். பொதுவாக இந்த வகையான உண்ணாவிரத முறையில், 16 மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடாமல், மீதமுள்ள 8 மணி நேரத்தில் போதிய உணவை எடுத்துக் கொள்வார்கள். இந்த முறையில் வாரத்தில் 5 நாட்களுக்கு எப்போதும் போல உணவை எடுத்துக் கொள்வார்கள். மீதமுள்ள 2 நாட்களில் கலோரிகளை கட்டுப்படுத்துவார்கள். இந்த உணவு முறை பழக்கத்தின் மூலமாக, உடல் எடை இழப்பு, மேம்பட்ட இன்சுலின் உற்பத்தி மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும் எனக் கூறுகின்றனர்.

ஆய்வு முடிவுகள் உண்மையா? 

இப்படி உணவு உண்ணும் நேரம் வெகுவாகக் குறைக்கப்படும்போது, இதய நோய் ஏற்படும் அபாயம் 91% வரை அதிகரிப்பதாக புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வை பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இதில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஏனெனில், இந்த ஆய்வு உள்ள ஷாங்காய் ஜியாவ் டோங் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினைச் சேர்ந்த ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நேரடியாக மக்களை சந்தித்து ஆய்வு செய்யப்படவில்லை. ஏற்கனவே இருந்த 20,000 பேரின் டேட்டாக்களின் அடிப்படையிலேயே, Intermittent Fasting முறையால் மாரடைப்பு ஏற்படும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். 

இதையும் படியுங்கள்:
Intermittent fasting இருப்பதால் மாரடைப்பு ஏற்படுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
intermittent fasting heart attacks

எனவே இந்த ஆய்வு எந்த அளவுக்கு உண்மையானது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த ஆய்வின் பங்கேற்பாளர்கள் எவ்வளவு காலம் வரை இன்டர்மிட்டெட் பாஸ்டிங் இருந்தார்கள் என்பதும் தெளிவாக இல்லை. இந்த ஆய்வு முடிவுகளில் போதிய தெளிவு இல்லை என்றாலும், ஏற்கனவே சில சுகாதார நிலைமைகளை எதிர்கொண்டு வரும் நபர்கள் இவற்றை முயற்சிக்க வேண்டாம். குறிப்பாக நீரிழிவு நோய், நாள்பட்ட உடல் சார்ந்த பாதிப்புகள் உள்ளவர்கள் இத்தகைய உண்ணாவிரத முறையை தொடங்குவதற்கு முன் ஒரு சுகாதார நிபுணர்வுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com