நூறு கிராம் உருளைக்கிழங்கில் புரதம், தாது, உப்புகள், நார்ச்சத்து, கொழுப்பு, கார்போஹைட்ரேட் என அனைத்தும் உள்ளன. இதில் வைட்டமின் சி கால்சியம் பாஸ்பரஸ் வைட்டமின் ஏ, வைட்டமின் பியும் உள்ளன.
உருளைக்கிழங்கில் மாவு பொருளும் சர்க்கரையும் அதிக அளவில் இருக்கின்றன. ஆகையால் தான் ஒரு மனிதன் தினமும் உருளைக்கிழங்கும் பாலும் மட்டும் சாப்பிட்டாலே அவனுடைய உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிட்டி விடும் என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
மனித உடலுக்கு பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி இவற்றிலிருந்து கிடைப்பதை விட அதிகமான சத்து உருளைக்கிழங்கிலிருந்து கிட்டுகிறதாம்.
குழந்தைகளுக்கு பாலுக்கு பதிலாக உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து கொடுக்கலாம். குழந்தையின் பசியும் அடங்கும். அதற்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும். கைக்குத்தல் அரிசியில் இருந்து கிடைப்பது போல் உருளைக்கிழங்கில் நமக்கு எந்த சத்துக்களும் அழியாமல் கிடைக்கின்றன.
உருளைக்கிழங்கில் தோலுக்கு அருகில் தான் அதிக அளவில் தாது உப்புக்களும், புரதச்சத்தும், ஊட்டச்சத்தும் இருக்கின்றன. ஆகையால் தோலை உரிக்காமல் வேக வைத்து நன்கு வெந்த பின் தோலை நீக்கி சாப்பிட்டால் எல்லா சத்துக்களும் அப்படியே நமக்கு கிட்டும்.
உருளைக்கிழங்கு வேகவைத்து தோலுடன் மசித்து தினமும் ஒரு வேளைவீதம் தொடர்ந்து பத்து நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் சொறி கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும்.
உருளைக்கிழங்கு சாற்றை வாத நோய்கள் தசைப்பகுதிகள் எலும்புகளின் இணைப்புகளில் வீக்கம் ஆகியவற்றிற்கு வெளி பூச்சாக பயன்படுத்தலாம்.
உருளைக்கிழங்கில் உள்ள மாவு சத்து அடி வயிற்றிலும் இரைப்பைகளிலும் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் தடுக்கிறது.
சாதத்தை குறைத்துக் கொண்டு உருளைக்கிழங்குடன் கீரை வகைகள், தக்காளி, வெள்ளரிக்காய், பீட்ரூட் போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தோலில் உள்ள சுருக்கங்களும் அழுக்குகளும் நீங்கும் மலச்சிக்கல் அகன்று ரத்தம் சுத்தமாகும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.
முதுமையாலும் வேறு பல காரணங்களாலும் முகத்திலும் உடலிலும் சுருக்கங்கள் விழுவதுண்டு. அவற்றை போக்க தினமும் படுக்கச் செல்வதற்கு முன் பச்சையான உருளைக்கிழங்கை நன்றாக தட்டி சுருக்கங்கள் விழுந்திருக்கும் இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும்.
குண்டான மனிதர்களை மேலும் குண்டாக்கி விடும் எனவே இவர்களும் நீரழிவு நோயாளிகளும், அளவுடன் மருந்து போல உருளைக்கிழங்கு சேர்த்து வர வேண்டும்.
ஞாபக சக்தி அதிகரிப்பதால் மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டம் சிறப்பாக இயங்கும் எனவே உருளைக்கிழங்கு வாரம் மூன்று வேளையாவது சேர்த்து வர வேண்டும்.
வேகவைத்து பின்பு தோல் நீக்கிய உருளைக்கிழங்கு, சிறந்த ஊட்டச்சத்து உணவு. இது குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும். மேலும் இது சிறுநீரைப் பெருக்கி பித்த கோளாறுகளையும் குறைக்கிறது.
உருளைக்கிழங்கின் தோலில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கண்டறிந்துள்ளனர் .
தாது உப்புக்கள் மட்டுமல்லாது ஜீரணம் அளிக்கும் பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. மேலும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது சிறந்த உணவாக கருதப்படுகிறது.
உணவில் உருளையை சேர்த்துக் கண்டால் வாயு தொல்லை ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். இதை எண்ணெயில் பொறித்து மசாலா போட்டு சாப்பிடுவதால் தான் வாயு தொந்தரவு ஏற்படும்.
வேக வத்த உருளைக்கிழங்கு போட்டு அடை அரைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் கெட்டு போதல், குடல் பாதையில் நச்சுத்தன்மை கொண்ட அமிலம் தீங்குதல் சிறுநீரில் புளிப்பு அமிலத்தால் ஏற்படும் நோய்கள் போன்றவை குணமாகும்.
உருளைக்கிழங்கை பயன்படுத்தும் காலத்தில் பூண்டை அதிக அளவில் சேர்த்து கொண்ட வாய்வுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் கிழங்கை கூழ் போல் செய்து கொடுக்கலாம். முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள் ஓரளவு தாராளமாக பயன்படுத்தலாம்.
முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் உருளைக்கிழங்கு வாரத்திற்கு ஒரு நாள் பயன்படுத்தினால் போதும்.
உருளைக்கிழங்கு பூண்டும் இஞ்சியும் சேர்த்து செய்யும் மசியல் மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது.
உருளைக்கிழங்கை அவித்த உருளைக்கிழங்காக தோலுடனே சாப்பிட்டால் தான் இவ்வளவு நன்மைகளும் கிடைக்கும்.