அயனி மரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலும்,கேரளா மாநிலத்திலும் அதிக அளவில் காணப்படுகின்றன. அயனி மரங்கள் தேக்கு போன்று உறுதியானதாகவும், தரமான தாகவும் இருக்கும்.
வீடுகளுக்கு கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பல்வேறு மரச்சாமான்கள் செய்ய மரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
பழங்கள் பலாப்பழம் போன்று ஆனால், அளவில் சிறியதாக இருக்கும். இதன் மேல் பகுதி முட்கள் போன்ற அமைப்பில் இருக்கும் உள் பகுதி விதைகளுடன் கூடிய சுளைகள் இருக்கும். லேசான இனிப்பும், புளிப்புமாக, உண்ண மிகவும் சுவையாக இருக்கும்.
பழத்தினுள் இருக்கும் விதைகள் கருமை நிறத்தில் இருக்கும். அதை வறுத்து சாப்பிடலாம். கேரளாவில் இந்த பழத்தை ’அஞ்சலி சக்கா’ என்று சொல்வார்கள்.
அயனியின் பாரம்பரிய பயன்கள் மற்றும் நன்மைகள்
கேரளாவில் பெரும்பாலான படகுகள் அயனி மரத்தால் செய்யபட்டவைதான்.
இந்த மரத்தின் இலைகளை யானைகளுக்கு உணவாக கொடுப்பார்கள்.
அயனி பழம் உடலில் உள்ள நீர் சத்தை குறைக்கும்.
குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன்கள் மனித ஆரோக்கியத்திற்கு நல்லது. இதயம் தொடர்பான பிரச்சினைகளை தடுக்க போதுமான அளவு LDL தேவைப்படுகிறது. அவை DNA சேதம் புரத ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஃப்ரீரேடிக்கல் குவிப்பு பாதைகளில் தலையிடுகின்றன.
புதிய சதை மற்றும் விதையில் அஸ்கார்பிக் அமிலம், பீனாலிக் கலவைகள் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டிற்கு உதவு கின்றன. இந்த பைட்டோ கெமிக்கல்கள், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள், எலும்பு வலு இழப்பு மற்றும் பலவற்றின் அபாயங்களை குறைக்கின்றன. இவை நரம்பு, மற்றும் தசை செயல்பாட்டை மேம்படுத்தும். அவை இரத்தத்தில் தீங்கு விளைவிக்கும் “ஹோமோ சைஸ்டீன்” செறிவை குறைக்கும் திறன் கொண்டவை.
அயனி அழற்சி எதிர்ப்பு விளைவுகளுடன் கூடிய சில உயிரியக்கக் கூறுகள் உள்ளன. இதிலிருந்து பெறப்படும் “ஃபிளாவனாய்டுகள்” பொதுவாக மேக்ரோபேஜ்கள், நியூட்ரோபில்கள் மற்றும் மாஸ்ட் செல்கள் ஆகியவற்றில் இருந்து அழற்சி மத்தியஸ்தர்களின் சுரப்பை தடுக்கின்றன.
அயனியின் பட்டை நீரழிவு, நாடா புழு தொற்று, இரத்த சோகை, மலேரியா காய்ச்சல், ஆஸ்த்மா, சரும அழற்சி, வயிற்று போக்கு, பருக்கள் மற்றும் புண்களை குணப்படுத்துகிறது.
அயனி பழத்தை சாப்பிடுவதால் புற்றுநோய் செல் உருவாவதை தடுக்கலாம்.
வயிற்று புண்களை ஆற்றும் திறன் உண்டு.
இதிலிருந்து பெறப்பட்ட நியாசின் நரம்பு செயல்பாடு மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றத்திற்கு பங்களிக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலிற்கு குளிர்ச்சியை தருகிறது.
இந்த விதையின் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமாவிற்கு அருமருந்து என்று சொல்லப்படுகிறது.
இதன் உலர்ந்த இலைகள் ஹைட்ரோ செல் சிகிச்சை அளிக்க பயன்படுகின்றன. இலைகள் மூட்டு வலி மற்றும் விறைப்பு தன்மைக்கு பயன்படுகிறது.