பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாத பெண்ணுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை பண்ணலாமா?

Cervical transplant surgery
Cervical transplant surgery

உலகிலேயே முதன் முதலாக ஸ்வீடன் நாட்டில் தான், 2014இல் ஒரு பெண்ணுக்குக் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?அந்தப் பெண்ணுக்கு 2015இல் அழகிய குழந்தை ஒன்று பிறந்தது. கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்த, உலகின் முதல் குழந்தை அது தான்.

அதன் பின்னர்தான் இங்கிலாந்தில் இது போல பத்து பெண்களுக்குக் கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்திட, இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது. இதிலும் வேறொரு மாற்றம்  நடந்தது.

ஸ்வீடனில் உயிருடன் இருக்கும் பெண்ணிடமிருந்து கர்ப்பப்பையைப் பெற்று,  அதனை வேறொரு பெண்ணுக்குப் பொருத்தி  வெற்றி கண்டார்கள். ஆனால், இங்கிலாந்தில் அப்படி அல்ல. இறந்த பெண்களிடமிருந்து கர்ப்பப்பையை எடுத்து, அதனைத் தேவைப்படும் மற்ற பெண்களுக்குப் பொருத்தி அதிலும் வெற்றி  கண்டனர். மேற்கண்ட மாற்று அறுவை சிகிச்சை மூலமாக 2017-ல் இங்கிலாந்தில் முதல் குழந்தை பிறந்தது.

மேலும், இங்கிலாந்தில் ஒரு பெண்ணுக்கு  பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லை. அதனால் என்ன? அந்தப் பெண்ணின் தாயிடமிருந்து தானமாகக் கர்ப்பப்பைப் பெற்று அவரது மகளுக்குப்  பொருந்தியதில், அந்த மகளும் ஒரு குழந்தைக்குத் தாயானாள்.

இத்தியாஷல் முதன் முதலாக புனே நகரில் 2017 மே மாதம் ஒரு பெண்ணுக்குக் கர்ப்பப்பை  மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது .

கர்ப்பப்பை வளர்ச்சி குன்றியவர்கள், கர்ப்பப்பை  பலம் குறைந்தவர்கள், பிறவியிலேயே  கர்ப்பப்பை இல்லாத பெண்கள் இவர்களுக்கு  ஏற்கனவே  குழந்தை பெற்றிருக்கும் பெண்களிடமிருத்து கர்ப்பப்பை பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். நவீன விஞ்ஞான மருத்துவ வளர்ச்சியில் இது ஒரு மைல் கல் ஆகும்.

பதில்: டாக்டர் கவிதா செந்தில், பங்கஜம் சீதாராம் நர்சிங் ஹோம்,

கேள்வி: என். கோமதி, நெல்லை.

(மங்கையர் மலர் (1-15)2018 இதழிலிருந்து.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com