இளமையின் இரகசியம் க்ரான்பெரி டீயிலா? அதன் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்!

cranberry tea
cranberry tea
Published on

பொதுவாகவே ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, பிளாக்பெரி போன்ற பெரி குடும்பத்தைச் சேர்ந்த பழங்களில் ஊட்டச் சத்துக்களின் அளவு மிக அதிகமாக இருக்கும். அவற்றில் ஒன்றான க்ரான்பெரி பழத்திலிருந்து தயாரிக்கப்படும் டீயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

க்ரான்பெரி டீயிலிருக்கும் (Cranberry Tea) ஆன்டி ஆக்சிடன்ட்களானது தீங்கு தரும் ஃபிரீ ரேடிக்கல்களுக்கு எதிராகப் போராடி செல்கள் சிதைவடைவதைத் தடுக்கின்றன. மேலும், உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் காக்கின்றன.

இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் குணமானது சிறுநீர்ப் பாதையில் காணப்படும் தொற்றுக்களை அழித்து, சிறுநீரக மண்டலத்தின் ஆரோக்கியம் காக்க உதவி புரிகிறது. குடல் ஆரோக்கியம் காத்து, சிறப்பான செரிமானத்துக்கு உதவுகிறது.

அஜீரணம், வயிற்றுப் பொருமல் போன்ற கோளாறுகளை குணமாக்குகிறது. இந்த டீ, LDL என்ற கெட்ட கொழுப்பை குறைக்கும். கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி சமநிலைக்குக் கொண்டு வரும். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். இதன் விளைவாய் இதய ஆரோக்கியம் காக்கப்படும்.

இதிலுள்ள வைட்டமின் C தொற்றுக்களை எதிர்த்துப் போராடி நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தொற்றுக்களால் உண்டாகும் நோய்களையும் குணமாக்கும். ஈறுகளில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது குடலில் உண்டாகும் வீக்கம் மற்றும் கீல் வாத நோயையும் குணமாக்கக் கூடியது. ஆன்டிஆக்சிடன்ட்கள் கொல்லாஜன் உற்பத்தியைப் பெருக்கி சருமத்திற்கு ஆரோக்கியம் தருகிறது. அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் சரும சிதைவைத் தடுக்கிறது. இளமைத் தோற்றத்தை தக்க வைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
முதியோர் கவனத்திற்கு! பார்வை மங்குதா? இந்த ஒரு பருப்பை சாப்பிட்டால் போதும்... கழுகுப் பார்வை கிடைக்கும்!
cranberry tea

இதில் கலோரி அளவு குறைவாக உள்ளது. உயர்தர உணவு மற்றும் வாழ்க்கை முறையிலேயே உடல் நீரேற்றம் பெற்று விடுவதால் அதிகளவு சர்க்கரை சேர்ந்த ஆரோக்கியமற்ற பானங்கள் அருந்தும் ஆசை அண்டாது. இவையெல்லாம் உடல் எடை கட்டுக்குள் இருக்க உதவி புரிகின்றன.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com