முருங்கை பிசின் ஒரு கழிவுப் பொருளா? அதன் நன்மைகள் பற்றி தெரியுமா?

Drumstick resin
Drumstick resin
Published on

முருங்கை கீரையில் எவ்வளவு சத்துக்கள் உள்ளதோ அதே அளவு சத்துக்கள் முருங்கை பிசினில் உள்ளது. முருங்கை கீரை சாதாரணமாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும். முருங்கை கீரையை நாம் எவ்வளவு உணவில் சேர்த்துக்கொள்கிறோமோ அந்த அளவு நம் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் முருங்கை கீரை, முருங்கைக்காய், முருங்கை பூ என அனைத்தும் சத்துக்கள் நிறைந்தவை. இவ்வாறு முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் பூ, காய், இலை ஆகியவற்றை பொரியல், கூட்டு, குழம்பு, சூப் வைத்து சாப்பிட்டால் உடல் வலுபெறும்.

இந்நிலையில் முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் மற்றொரு பொருள் தான் முருங்கை பிசின். பிசின் என்றவுடன் நாம் முருங்கை மரத்தின் கழிவு என்று நினைத்திருப்போம். ஆனால் முருங்கை பிசினில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏராளம். நாம் இந்த பதிவில் முருங்கை பிசின் நன்மைகள் பற்றி காணலாம்.

முருங்கை பிசின்:

முருங்கை மரத்திலிருந்து வெளியேறும் கெட்டியான மற்றும் ஈரப்பதம் கொண்ட பொருள் தான் முருங்கை பிசின். இது கழிவு என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். முருங்கை மரத்தில் உள்ள அதிகப்படியான கால்சியம், நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து தான் பிசினாக வெளியேறும். ஆரம்பத்தில் பிசுபிசுப்பாக இருந்தாலும், நாளடைவில் கெட்டியாக மாறிவிடும். இதனை ஆங்கிலத்தில் Drumstick tree resin அல்லது Moringa Oleifera Resin என்று கூறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
முருங்கை மரம், முருங்கைக்கீரை, முருங்கைக்காய் இவை கனவில் வந்தால் என்ன அர்த்தம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Drumstick resin

முருங்கை பிசின் நன்மைகள்:

வணிக சந்தையில் முருங்கை பிசின் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.

மேலும் முருங்கை பிசினில் வைட்டமின் A, C, கால்சியம், பொட்டாசியம், தாதுப்புக்கள் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. 

முருங்கை பிசினில் வைட்டமின் C உள்ளதால், வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். மேலும் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

முருங்கை பிசினை நெய்யில் வறுத்து பொடி செய்து மூட்டுவலி ஏற்படும் போது 1 ஸ்பூன் பொடியை பாலில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகிவிடும். முருங்கை பிசினில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் வாரத்திற்கு இருமுறை குடித்து வரலாம்.

இதையும் படியுங்கள்:
‘மார்னிங்’ டிபனுக்கு செஞ்சு கொடுங்க… முருங்கை பொடி இட்லி!
Drumstick resin

முருங்கை பிசினை பாதம் பிசின் போன்று நன்றாக கழுவி சுத்தமான நீரில் முதல் நாள் இரவு ஊறவைத்து கொள்ள வேண்டும். மறுநாள் பசும்பாலில் நாட்டுச்சக்கரை சேர்த்து காய்ச்சி, இதில் ஊறவைத்த முருங்கை பிசினை கலந்து பருகி வந்தால் உடல் பலம் பெரும்.

இளநரை, முடி அதிகம் உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கை பிசின் சிறந்த தீர்வாகும். 

தலைவலி உள்ளவர்கள் முருங்கை பிசின் பொடியை தலையில் பற்று போட்டு வந்தால் தலைவலி சரியாகிவிடும். 

உடல் பருமனாக உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதோடு, முதல் நாள் இரவு ஊறவைத்த முருங்கை பிசின் நீரை பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து உடல் வலு பெறும்.

முருங்கை பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி வந்து பயன்படுத்தலாம். எனவே முருங்கை காய், கீரை, பூ ஆகியவற்றில் எவ்வளவு சத்துக்கள் உள்ளதோ அதே அளவிற்கு முருங்கை பிசினில் அதிக அளவிலான சத்துக்கள் கிடைக்கிறது என்பதை அறிந்து செயல்படுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com