ரோட்டுக்கடைகளில் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? 

roadside stalls
Is eating at roadside stalls healthy?
Published on

தெருவோர உணவு என்பது இந்தியாவின் கலாச்சாரத்தில் பிரிக்க முடியாத ஒரு பகுதி. கண்ணைப் பறிக்கும் வண்ணம், மணம் கமழும் சுவைகள், மலிவான விலை என தெருவோர உணவகங்கள் நம்மை ஈர்க்கின்றன. ஆனால், இந்த சுவையான உணவுகள் நம் உடல் நலனுக்கு எவ்வளவு பாதுகாப்பானது? தெருவோர உணவுகள் நம் உடலுக்கு நன்மை தருமா அல்லது தீமை தருமா என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.‌ 

தெருவோர உணவுகளின் நன்மைகள்: 

தெருவோர உணவுகள் பல்வேறு வகையான உணவுகளை உண்ணும் வாய்ப்பை வழங்குகின்றன. இதனால், ஒவ்வொருவரின் சுவைக்கும் ஏற்றவாறு உணவுகளை தேர்வு செய்ய முடியும். இந்த உணவுகள் எப்போதும் எளிதில் கிடைக்கும் என்பதால், விரைவாக பசியை போக்கிக்கொள்ள இது ஒரு எளிமையான வழியாகும். 

தெருவோர உணவுகள் பெரிய உணவகங்களில் கிடைக்கும் உணவுகளை விட மிகவும் குறைந்த விலையில் இருக்கும். இது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். இதுபோன்ற உணவுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள சிறந்த வழியாக உள்ளன. 

தெருவோர உணவுகளின் தீமைகள்: 

பல தெருவோர உணவகங்கள் சுகாதாரமற்ற நிலையில் செயல்படுகின்றன. இதனால், உணவில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமிகள் கலக்க வாய்ப்புள்ளது. சில தெருவோர உணவகங்கள் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இது உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

தெருவோர உணவுகள் பொதுவாக அதிக எண்ணெயிலும், காரத்திலும் சமைக்கப்படுகின்றன. இது செரிமானப் பிரச்சனைகள் உடற் பருமன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். முற்றிலும் சுகாதாரமற்ற நிலையில் தயாரிக்கப்படும் சில தெருவோர உணவுகளை உண்பதால், உணவு விஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

தெருவோர உணவுகளை பாதுகாப்பாக உண்ணும் வழிகள்: 

எப்போதுமே, சுத்தமாகவும் நன்கு பராமரிக்கப்பட்டும் இருக்கும் தெருவோர உணவகங்களைத் தேர்வு செய்யவும். குளிர்ந்த உணவுகளில் பாக்டீரியா வளரும் வாய்ப்பு அதிகம் என்பதால், சூடான உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். தெருவோர கடைகளில் இருந்து வாங்கும் பழங்கள் காய்கறிகளை நன்கு கழுவி பயன்படுத்துங்கள். 

இதையும் படியுங்கள்:
சைவ உணவு உண்பதால் கிடைக்கும் 12 நன்மைகள் தெரியுமா?
roadside stalls

முடிந்தவரை எந்தப் பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்க்கவும். இவை தூசி, அழுக்கு போன்றவற்றால் மாசுபடும் வாய்ப்புள்ளதால், இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எப்போதுமே உணவு உண்ணும் முன் கைகளை நன்கு கழுவி உணவு அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

என்னதான் தெருவோர உணவுகள் சுவையாகவும், குறைந்த விலைக்கும் கிடைத்தாலும், அதில் ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. சுகாதாரமற்ற நிலையில் தயாரிக்கப்படும் தெருவோர உணவுகளை உண்பதால், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தெருவோர உணவுகளை தேர்வு செய்யும்போது கவனமாக இருப்பது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com