கடைகளில் தற்போது டீ, காபி குடிக்க வேண்டும் என்றால் Disposable paper cupsஐ பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். டீ, காபி குடித்துவிட்டு கப்பை தூக்கி எறிந்துவிடுவது அடுத்தவர்கள் எச்சில் பட்ட டம்ளரில் சாப்பிடுவதை விட ஆரோக்கியமானது என்று கருதினாலும் பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பது கேன்சர் வருவதற்குக் காரணமாக இருக்கும் என்று கூறுவது உண்மையா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பேப்பர் என்பது நுண்துளைகளால் உருவாக்கப்பட்டது. எனவே, இதில் டீ, காபி போன்ற திரவங்களை ஊற்றும்போது அப்படியே வெளியே வந்துவிடும். பிறகு எப்படி பேப்பர் கப்பில் டீ, காபி குடிக்க முடிகிறது என்று பார்த்தால், இதில் மொத்தம் 3 லேயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
முன்பெல்லாம் பேப்பர் கப்பின் உள்ளே மெழுகு கோட்டிங் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் அது செய்யப்படுவதில்லை. அதற்கு பதில் Polyethylene என்று சொல்லக்கூடிய அதே பிளாஸ்டிக்தான் மிகவும் மெல்லிய லேயராக பேப்பர் கப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே கப்பில் இருந்து திரவம் வழிந்து வராமல் இருக்கவும், கப்பின் வடிவத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.
பேப்பர் கப்களில் 15 நிமிடத்திற்கு மேலே சூடான திரவம் இருந்தால், எண்ணற்ற நுண் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் திரவத்தில் கலந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. 100 ml சூடான திரவம் 15 நிமிடம் பிளாஸ்டிக் கப்பில் இருந்தால் 25,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்துவிடுகிறது.
எனவே, ஒரு நாளைக்கு 3 கப் டீயை பிளாஸ்டிக் கப்பில் குடித்தால், 75,000 மைக்ரோ பிளாஸ்டிக் நுண் துகள்கள் உடலில் கலந்துவிடும். இதைத் தொடர்ந்து செய்துக்கொண்டே வந்தால் கேன்சர் போன்ற உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடிய நோய்கள் வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
எனவே, பேப்பர் கப்பில் தண்ணீர், ஜூஸ் குடிப்பது பிரச்னையில்லை. ஆனால், சூடான பொருட்களைத் தவிர்ப்பது நல்லதாகும். சமீபத்தில் Polyethylene என்னும் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக Poly lactic acid என்னும் ஆர்கானிக் காம்போன்ட்டை கண்டுப்பிடித்துள்ளர். இது எளிதில் degrade ஆகக்கூடியது மட்டுமில்லாமல், உடலுக்கும் கேடு விளைவிக்காது என்று சொல்லப்படுகிறது.