தினமும் சோளம் சாப்பிடுவது நல்லதா?

Corn
Corn
Published on

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று மக்காச்சோளம். அந்த மக்காச்சோளத்தை தினமும் சாப்பிட்டு வருவது நல்லதா? என்று பார்ப்போம்.

நாட்டு மக்காச்சோளம் மற்றும் அமெரிக்கன் கார்ன் என இரண்டு வகையான மக்காச்சோளங்கள் உள்ளன. இதில் இப்போது சாலையோரங்களில் விற்கப்படுபவை அமெரிக்கன் கார்ன் வகையாகும். இதுதான் இப்போது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒன்றாகும். இரண்டில் எந்த சோளம் வேண்டுமானாலும் தினமும் சாப்பிட்டு வரலாம். இது உடலுக்கு அவ்வளவு நன்மைகளை தருகிறது.

வேகவைத்த மக்காச்சோளத்தில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

வேகவைத்த மக்காச்சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற மினரல்கள் அதிகம் உள்ளன. இவை நாம் உண்ணும் உணவுகளிலிருந்து கால்சியம் சத்தை உறிஞ்சுக்கொள்ள உதவுகிறது. இதனால், எலும்புகள் பலவீனமாவதிலிருந்து தடுத்து, எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வேகவைத்த மக்காச்சோளத்தில் வைட்டமின்கள், மினரல்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. அதேபோல் 100 கிராம் சோளத்தில் 365 கலோரிச் சத்துக்கள் இருக்கின்றது. எனவே தான் இந்த சோளத்தில் இருக்கின்ற மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறது. மேலும் கொலஸ்டிராலைக் குறைப்பதன் மூலம் இதய நோய் ஆபத்துகளையும் குறைக்கச் செய்யும்.

வேகவைத்த சோளத்தில் உளள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினை வராது. ஏற்கனவே மலைச்சிக்கல் இருப்பவர்களுக்கும் அந்தப் பிரச்சனையை சரி செய்யும். ஆகையால், தினமும் ஒரு கை அளவு வேகவைத்த மக்காச்சோளத்தை எடுத்து வாருங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வரலாம்.

இதையும் படியுங்கள்:
தீரா சளியா? நச்சரிக்கும் நாசி பாலிப்கள்! அறிகுறிகள் என்ன? கண்டறிவது எப்படி?
Corn

அரை கைப்பிடி அளவுக்கு நீங்கள் வேகவைத்த கார்ன் எடுத்துக் கொள்ளும்போது, அதிலுள்ள ஆக்சிஜனேற்றங்கள் ரத்த சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்கும். இதனால் இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும்.

வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரி செய்து உண்ணும் உணவுகள் நன்றாக ஜீரணம் ஆக வழிச் செய்கிறது. சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com