ஆரோக்கியமாய் வாழ ஆடம்பர செலவு அவசியமா?

Sun and a girl
Healthy LifeMedkart
Published on

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு எப்போதும் ஆடம்பரமான சூப்பர்ஃபுட்கள் அல்லது விலை உயர்ந்த உணவுகள் தான் வேண்டும் என்று இல்லை. உங்கள் வீட்டில் அல்லது உங்களுக்கு அருகில் கிடைக்கும் பொருட்களை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பெறலாம். அப்படி சீரான உணவு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பராமரிப்பதற்கான சில நடைமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்

1. விதவிதமான உணவுகளை உண்ணுங்கள்:

ஆரோக்கியமான உணவு என்பது வண்ணமயமான தட்டு போன்றது. வெவ்வேறு நிறங்களை கொண்ட வெவ்வேறு வகைகளை சேர்ந்த உணவுகளை சேர்ப்பதன் மூலம் நீங்கள் பலன்களை பெறலாம். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. தினமும் உங்களுக்கு பிடித்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். இதை உண்பதாலே நமக்கு பல வகைகளில் நன்மை ஏற்படுகிறது. நீங்கள் அன்றாடம் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளும் தானியங்கள்,அரிசி ஆகிவற்றில் கூட நீங்கள் பலன்களை பெறலாம்.

அதேபோல் உங்களுக்கு அன்றாடம் தேவைப்படும் புரதம்(Protein) சத்துகளுக்கு பீன்ஸ், பருப்பு, மீன், மற்றும் முட்டைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். காரணம் அவை வளர்ச்சி மற்றும் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய புது திசுக்களை(Tissues) உருவாக்கும் அமினோ அமிலங்களை(Amino acids) வழங்குகின்றன. உங்கள் உடல் அசைவுகளுக்கு உறுதுணையாக இருக்கும் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை நீங்கள் பால் பொருட்களை பருகுவதன் மூலம் பெறலாம்.

2. தேவையான நீரேற்றம்:

தினமும் உங்களை புத்துணர்ச்சியாக மற்றும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள குறைந்தது 6 முதல் 8 கிளாஸ் அல்லது 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். அப்போதுதான் உங்கள் செரிமானம், சரும ஆரோக்கியம் மற்றும் உங்கள் உடலில் உள்ள ஒட்டுமொத்த பாகங்களுக்கு தேவையான உயிர்ச்சக்தியை நீங்கள் பெறமுடியும்.

3. நிதானம் முக்கியமானது:

‘என்றைக்கும் அதே சாம்பார், இட்லி , தோசை தான என்று கருதுவார்கள்’ எப்போதாவது கேக், சாக்லேட் மற்றும் வறுத்த உணவுகள் போன்ற வெளி உணவுகளை சுவைப்பதில் தவறில்லை . ஆனால் கிடைத்த வரை லாபம் என்ற நோக்கத்தில் பார்க்கும் அனைத்தையும் வாயில் போட்டு திணித்தால் உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம் என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்.

4. அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரையை தவிர்க்கவும்:

அதிக உப்பு உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உப்பு திண்பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு ஒரு அளவை வைத்துக்கொள்ளுங்கள். காரணம் செயற்கையான சர்க்கரை பானங்கள் மற்றும் இனிப்புகள் நாவிற்கு சுவையாக தான் இருக்கும், ஆனால் உடலுக்குள் சென்றவுடன் நீங்கள் பல விளைவுகளை சந்திக்க நேரிடலாம். அதனால் உங்களுக்கு இனிப்பை சுவைக்க வேண்டும் என்று ஆசை வந்தால் இயற்கையான பழங்களில் கிடைக்கும் இனிப்பைத் ருசியுங்கள்.

இதையும் படியுங்கள்:
‘எனக்கு ஏற்ற வேலை எது?’ என்று தேடுபவரா நீங்கள்? உடன் இங்கே அணுகவும்!
Sun and a girl

5. உங்கள் உடலைக் கேளுங்கள்:

‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ இதை மனதில் வைத்து கொண்டு, நீங்கள் எப்போது பசியாக உணர்கிறீர்களோ அப்போது சாப்பிடுங்கள். அதே போல் எப்போது உங்கள் உடல் போதும் என்று உணர்கிறதோ அப்போது நிறுத்தி கொள்ளுங்கள்.

6. வீட்டில் சமைக்கவும்:

எல்லா நேரமும் வெளியில் சாப்பிடுவதை குறைத்து கொண்டு வீட்டில் உணவைத் தயாரித்து எடுத்துக்கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

7. புதிய மற்றும் உள்ளூர் உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்:

அன்றைக்கு சந்தைக்கு வரும் ஃப்ரேஷ் விளைச்சல்களில் பெரும்பாலும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆகையால் உள்ளூர் விவசாயிகளால் சந்தைகளில் விற்கப்படும் பொருட்களை முடிந்த வரை தினந்தோறும் வாங்க பழகுங்கள். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com