கருப்பு காபி அருந்துவது ஓகேவா?

Black Coffee
Black Coffee
Published on

காபி அருந்தினால் தான் புத்துணர்வு வருகிறது. எந்த வேலையையும் செய்ய முடிகிறது என்று காபி பிரியர்கள் சொல்வதை கேட்கலாம். இது உண்மை தான். காபி உடலுக்கு புதிய புத்துணர்ச்சியை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் தூக்க தன்மையை உருவாக்கும் அடினோசின் என்ற ரசாயனத்தை காபி தடுத்து நிறுத்துகிறது. இதனால் தான் காபி குடித்த உடன் சோர்வு நீங்கி புத்துணர்வு வருகிறது என்கின்றன ஆய்வுகள்.

இது மட்டுமல்ல. காபி அருந்துவதால் உடலின் செயல்திறன் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தீவிர உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் காபி அருந்தும் போது அவர்களின் உடல் வலிமை அதிகரித்து செயல் திறன் இயல்பை விட கூடுதலாக இருக்கும்.

இதுமட்டுமின்றி காபி அருந்துவது மற்றும் காபி கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் கிரீம்களை தலைக்கு தேய்த்து வருவதால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்றும், மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்பை தவிர்க்கவும் காபி உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
குளிர்கால சளித் தொல்லையா? இயற்கையான முறையில் நிவாரணம் பெறும் வழிகள்! 
Black Coffee

காபின் விழிப்புணர்வையும் கவனத்தையும் அதிகரிக்கும், பதட்டத்தைக் குறைக்கும் மற்றும் மனநிலையை மேம்படுத்தும். காபியில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ப்ரீபயாடிக்குகள் உள்ளன. அவை உங்கள் குடல் நுண்ணுயிரியின் பன்முகத்தன்மையை மேம்படுத்தும்.

உங்களுக்கு காபி பழக்கம் நன்றாக இருக்கலாம் மற்றும் அதில் சில நன்மைகள் கூட இருக்கலாம். ஆனால் காபியால் நெஞ்செரிச்சல், பதட்டம் அல்லது தூக்கமின்மை போன்ற பக்கவிளைவுகள் இருந்தால், அதைக் குறைவாக குடிப்பது நல்லது. நீரிழிவு நோயாளிகள் காபியை தவிர்க்க வேண்டும், ஏனெனில் காபின் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை உயர்த்தும்.

கருப்பு காபி அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கருப்பு காபி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது, மேலும் இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம். கருப்பு காபி மூளை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோயிலிருந்து பாதுகாக்க உதவும். கல்லீரல் கொழுப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து கல்லீரலைப் பாதுகாக்க கருப்பு காபி உதவும்.

ஆரோக்கியமான பெரியவர்கள் ஒரு நாளைக்கு 400 மில்லிகிராம் காபின் அல்லது அதற்கும் குறைவாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். இது தோராயமாக நான்கு கப் காபியில் உள்ள காஃபின் அளவு. கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுப்பவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 200 மி.கி காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டும். சில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்பவர்கள் காஃபின் அளவைக் குறைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உறவுகளை ஒருங்கிணைக்கும் காணும் பொங்கல்!
Black Coffee

ஆனால் இந்த பலன்களை எல்லாம் பெற காபியை சரியான முறையில் அருந்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

எக்காரணம் கொண்டும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி அருந்துவது கூடாது. தேவையான அளவு தண்ணீர் அருந்தி விட்டு சில நிமிடங்கள் கழித்து தான் காபி அருந்த வேண்டும்.

காபி உடலின் உள் உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதால் இதய செயலிழப்பை தடுப்பதாகவும், பக்கவாதம் உள்பட பல்வேறு தீவிர நோய்களை தடுக்கும் ஆற்றல் காபிக்கு உள்ளதாகவும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com