இன்றைய காலத்தில் நம்முடைய உணவுப்பழக்கங்கள் முற்றிலுமாக மாறிவிட்டன. அதிலும், தயிரை இப்போதெல்லாம் வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதற்கு பதிலாக எளிதாக கடைக்கு சென்று வாங்கி சாப்பிடுவது அதிகமாகிவிட்டது. இது வசதியானதாக இருந்தாலும் பாக்கெட் தயிர் ஆரோக்கியமானதா? என்ற கேள்வி பலரின் மனதில் எழுகிறது. வீட்டில் தயாரிக்கப்படும் தயிரின் ஊட்டச்சத்து மதிப்பை ஒப்பிடும்போது, பாக்கெட் தயாரின் ஊட்டச்சத்து மதிப்பு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய்வது அவசியமாகிறது.
பாக்கெட் தயிரின் தயாரிப்பு முறை: பாக்கெட் தயிர் பாஸ்சுரைஸ் செய்யப்பட்ட பால் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதில் பால் அதிக வெப்பநிலையில் சிறிது நேரம் சூடாக்கப்பட்டு பின்னர் குளிர்விக்கப்படும். இதன் மூலம் பாலில் உள்ள கெட்ட விஷயங்கள் மற்றும் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. பின்னர், இந்த பாலை தயிராக மாற்றும் பாக்டீரியாக்கள் சேர்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் வைக்கப்படுகிறது. தயிர் தயாரானதும் அது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கப்படுகிறது.
பாக்கெட் தயிரின் நன்மைகள் என்று பார்க்கும்போது இவை எடுத்துச் செல்லவும், எளிதாக உட்கொள்ளவும் வசதியாக இருக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் பால் Pasteurization செய்யப்படுவதால், பாக்கெட் தயிர் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும். பாக்கெட் தயிர் பல்வேறு சுவைகளில் கிடைப்பதால் அதை வாங்கி உண்பவர்கள் தங்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்ய முடியும். மேலும், இதில் கால்ஷியம், புரதம், வைட்டமின் பி12 போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
பாக்கெட் தயிரின் தீமைகள் என்று பார்த்தால் பாஸ்சரைசேஷன் செயல்முறையின்போது பாலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களான புரோபயோட்டிக்கள் பெரும்பாலும் அழிக்கப்படுகின்றன. சில பாக்கெட் தயிர்களில் செயற்கை நிறங்கள், சுவைகள் மற்றும் கெட்டுப் போகாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், சில பாக்கெட் தயாரில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பாக்கெட் தயிர் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
பாக்கெட் தயிரை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை:
சந்தையில் பிரபலமாக இருக்கும் நன்கு அறியப்பட்ட பிராண்டுகளைத் தேர்ந்தெடுக்கவும். தயிரில் உள்ள சர்க்கரை கொழுப்பு மற்றும் புரதத்தின் அளவை கவனித்து வாங்குங்கள். நிறங்கள் சுவைகள் மற்றும் ரசாயனங்கள் இல்லாத தயிர்களை தேர்ந்தெடுக்கவும். ப்ரோபயோடிக்கள் சேர்க்கப்பட்ட தயிரை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.
பாக்கெட் தயிர் வாங்குவது வசதியானதாக இருந்தாலும் அது நம் வீட்டிலேயே செய்யும் தயிரை விட குறைந்த ஊட்டச்சத்து மதிப்புகளைக் கொண்டிருப்பதால், ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். எனவே, உங்களால் முடிந்தால் வீட்டில் தயிர் தயாரித்து உண்ணலாம் அல்லது மேலே குறிப்பிட்ட காரணிகளை கவனத்தில் கொண்டு, சரியான பாக்கெட் தயிர்களை தேர்ந்தெடுத்து வாங்கி சாப்பிடலாம்.