Pap smear பாப் ஸ்மியர் பரிசோதனை கல்யாணம் ஆகாத பெண்மணிகளுக்கு மறுக்கப்படுகிறதா?

கல்யாணமாகாத மகளிருக்கும், விதவைகளுக்கும் கர்ப்பவாய் (செர்விக்ஸ்) புற்றுநோய்க்கான சிகிச்சை செய்யக்கூடாது என்ற நம்பிக்கை முற்றிலும் தவறானது.
Pap smear test
Pap smear testimage credit - News-Medical, Max Healthcare
Published on

சென்னையில் சில மருத்துவமனைகள், சில மருத்துவ மையங்கள் திருமணமாகாத பெண்களுக்குப் பாப் ஸ்மியர் (Pap Smear) பரிசோதனையை மறுக்கின்றன என்பது கவலைக்குரிய விஷயமாக இருந்தது.

தேசிய மகளிர் ஆணையம் கவனத்துக்குச் சென்றபின் Directorate of Medical Board குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஏன் இது நிராகரிக்கப்பட்டது என்று விளக்கம் கேட்டுள்ளது.

கல்யாணமாகாத மகளிருக்கும், விதவைகளுக்கும் கர்ப்பவாய் (செர்விக்ஸ்) புற்றுநோய்க்கான சிகிச்சை செய்யக்கூடாது என்ற நம்பிக்கை முற்றிலும் தவறானது.

மருத்துவ ரீதியாக எந்த அடிப்படையும் இல்லாத ஒரு தவறான கருத்து.

மருத்துவ ரீதியான உண்மை என்னவெனில், கர்ப்பவாய் புற்றுநோய் (Cervical Cancer) என்பது யாருக்கும் வரக்கூடியது. திருமணமாகாமை, விதவையாக இருப்பது போன்ற காரணங்கள் இந்த நோய்க்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை.

இதையும் படியுங்கள்:
கர்ப்ப கால தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!
Pap smear test

முக்கியக் காரணமாக HPV (Human Papillomavirus) தொற்று மற்றும் பிற கர்ப்பவாய் செல்களின் மாற்றம் காரணமாக ஏற்படுகிறது.

திருமண நிலையைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு பெண்களும் சமமான சிகிச்சை பெறுவதை மருத்துவ அறிவியல் உறுதிசெய்கிறது.

21 வயதுக்குப் பிறகு, பாலியல் செயல்பாடுகள் தொடங்கியிருந்தாலோ இல்லையோ, பெண்கள் பாப் ஸ்மியர் பரிசோதனை செய்யலாம். புற்றுநோயின் படிப்படியான வளர்ச்சியை அடையாளம் காண Pap Smear Test மற்றும் HPV Test போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்.

நம்பிக்கைகள் மற்றும் தவறான புரிதல்கள் காரணமாகச் சிகிச்சையைத் தவிர்க்கக் கூடாது. சில பழைய சமூக நம்பிக்கைகள் இதற்குத் தடையாகக் கூட இருக்கும். ஆனால், காலதாமதமான சிகிச்சை வாழ்வுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
புற்றுநோய் வரும்முன் காக்க சில யோசனைகள்!
Pap smear test

செர்விகல் கான்சர் உலகளவில் பெண்களில் நான்காவது மிகப் பொதுவான புற்றுநோயாகும். இது ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், சிகிச்சை பெறுவதன் மூலம் முழுமையாக குணமடைய வாய்ப்பு அதிகமாகும்.

பாப் ஸ்மியர் பரிசோதனை தேவையென நினைக்கும் பெண்கள், நம்பகமான மற்றும் திறமையான மருத்துவ ஆலோசகரை அணுகி, அவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: பெண்களின் உடல்நல பராமரிப்பில் பாப் ஸ்மியர் பரிசோதனையின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

இதையும் படியுங்கள்:
இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 
Pap smear test

பெண்களின் உடல்நலம் மற்றும் நலனுக்காக, பாப் ஸ்மியர் போன்ற பரிசோதனைகள் திருமண நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com