தூங்குவது மட்டுமா ஓய்வு? 7 வகையான ஓய்வுகள் இருக்காம்ல?

Rest
Rest

- மணிமேகலை

எந்த ஒரு உயிரினமாலும் சரி, இயந்திரமானலும் சரி தன் வேலையைச் சரிவர செய்யவதற்கு உழைப்புடன் ஓய்வும் அவசியமான ஒன்று. அதனால்தான் நாள் முழுக்க வேலை செய்து இரவில் ஓய்வெடுக்கிறோம். ஓய்வு என்றால் படுத்து தூங்குதல் அல்லது எந்த வேலையும் செய்யாமல் இருப்பது என்ற தவறான எண்ணம் சிலருக்கு உண்டு. இவை இரண்டும் உடல் ரீதியான ஓய்வில் வரும். இதையும் தாண்டி ஓய்வில் நிறைய வகைகள் உண்டு. ஒரு மனிதன் நலமுடன் வாழ

7 வகையான ஓய்வுகள் அவசியமானது. அவை என்னவெல்லாம் என்று தெரிந்துகொள்வோமா.?

1. உடல் ஓய்வு:

பல மணிநேரம் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் உடலை கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் வைத்திருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இடை இடையே நடப்பது, உடலை வளைத்துக் கொடுப்பது என்ற ஓய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம். அதிக உடலுழைப்பில் ஈடுபவர்கள் வேலையின் இடையே ஒரு குட்டி தூக்கம் போடுவது அடுத்து அந்த வேலையைச் செய்வதற்கான சக்தியை மீட்டுத் தர உதவியாக இருக்கும்.

2. எமோஷனல் ஓய்வு:

கவலை மன அழுத்தம் போன்ற உணர்வுகளிடமிருந்து ஓய்வு பெற self care செய்வது முக்கியமானது. அதாவது, தங்கள் உடை, முகம் போன்றவற்றில் அக்கறை செலுத்தலாம். இதன்மூலம் உங்கள் மீது உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொண்டு வர இயலும். தங்களுகென்றே சுயக்கட்டுப்பாடுகளை வரையறுத்துக்கொள்ளலாம். எவையெல்லாம் நமக்கு கவலை, மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடுமோ அவற்றிலிருந்து விலகி இருக்கலாம். அன்றைய தினங்களில் நடப்பதை டைரியில் குறித்து வைத்துக்கொள்ளலாம். பொழுதுபோக்கு உங்கள் உணர்வுகளும் மனதுக்கும் ஓய்வைப் பெற்றுத் தர உதவுகிறது. சிறிது நேரம் பாடல் கேட்பது, காமெடி புரோகிராம் பார்ப்பது, வரைதல், எழுதுதல், போன்ற ஏதாவது பொழுதுபோக்கில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

3. மன (மென்டல்) ஓய்வு:

யோகா மற்றும் தியானம் மூலமாக நம் மனதை கட்டுப்படுத்த இயலும். இதனால் மனதுக்கு அமைதி கிடைத்த மாதிரியும் ஆயிற்று, நமக்கு ஓய்வு கிடைத்த மாதிரியும் ஆயிற்று. மனதை ரிலாக்ஸ் செய்யக்கூடிய விளையாட்டுகளில் ஈடுபட்டு நம் மூளைக்கு வேலை தரலாம்.

இதையும் படியுங்கள்:
பிரபலங்கள் குடிக்கும் ‘பிளாக் வாட்டர்’ பற்றித் தெரியுமா?
Rest

4. சென்சரி (sensory) ஓய்வு:

நமது ஐம்புலங்களுக்கான ஓய்வு இது. இன்றைய நவீன காலகட்டத்தில் பலர் கைபேசி, கணினி, லேப்டாப், தொலைக்காட்சி போன்ற தொடுதிரை சாதனங்களை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். புத்தகம் வாசிப்பது மூலமாகவோ அல்லது இயற்கையில் மனதை லயிக்க வைப்பது மூலமாகவோ கொஞ்ச நேரம் தொடுதிரையில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்வது அவசியமான ஒன்று.

5. சமூக ஓய்வு:

சுய விருப்பு வெறுப்புகளை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாமல் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், உங்களுக்கான நேரத்தைச் செலவிடுதல், தற்போது அநேகமாக பேசப்படும் டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்து மீண்டு வருதல், உங்களை அதிகமாக மகிழ்ச்சிப்படுத்தும் ந(ண்)பர்களுடன் நேரத்தைச் செலவிடுதல் போன்றவை பெருமளவில் உதவும்.

6. கற்பனை (Creative rest) ஓய்வு:

வரைதல், எழுதுதல், கைவினைப்பொருள்கள் செய்தல், வேஸ்டில் இருந்து அலங்காரப் பொருட்கள் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதும் ஓய்வாகும்.

7. ஆன்மீக ஓய்வு:

கடவுள் வழிபாடு மற்றும் ஆன்மீகச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் ஒருவிதமான ஓய்வாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com