ஆரோக்கியத்தில் அக்கறையுள்ள பலருக்கு சர்க்கரை என்பது பெரும்பாலும் தடையாக இருக்கிறது. ஆனால் அது எப்போது உணவு வில்லனாக மாறியது? நிபுணர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
சமீபத்திய ஆண்டுகளில் பலர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால், தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிவிட்டனர். அதனால் சர்க்கரையை தவிர்க்க தொடங்கியுள்ளனர். ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இனிப்புகளைத் தவிர்ப்பது முதல் மூலப்பொருள் லேபிள்களை படித்து சர்க்கரை எவ்வளவு கலந்துள்ளது என்று பார்ப்பது வரை, சர்க்கரையைக் குறைக்கும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது.
ஆனால் அந்த காலத்தில் வீட்டு கொண்டாட்டங்களில் சர்க்கரை பிரதானமாக இருந்தது. நம் முன்னோர்கள் கலோரிகள் அல்லது உடல்நல அபாயங்களைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் லட்டுகள் மற்றும் கீர் போன்ற இனிப்புகளை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர்; அவர்கள் இன்றும் ஆரோக்கியமாக வாழ்வதாகத் தோன்றுகிறது.
ஒவ்வொரு கொண்டாட்டத்தின் வாழ்க்கையாக இருந்த சர்க்கரை இப்போது ஏன் 'நச்சு' என்று கருதப்படுகிறது? என்பதற்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்?
உங்கள் உணவுகளில் இயற்கையாகவே சர்க்கரை சேர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் சர்க்கரையை சுமார் 30 கிராம் அல்லது 7 டீஸ்பூன்கள் அல்லது மொத்த கலோரி உட்கொள்ளலில் 5% முதல் 10% வரை எடுத்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
சர்க்கரை ஏன் திடீரென நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது?
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், சர்க்கரையை குறைக்கும் ஆலோசனையை நீங்கள் கேட்டிருக்கலாம். உடல்நலக் குறைபாடுகளைப் பற்றி கவலைப்படாமல் கீர், லட்டு, ஹல்வா போன்ற இனிப்புகளை அனுபவிக்க நம் முன்னோர்கள் தயங்கவில்லை. ஆனால் தற்போது ஏன் சர்க்கரை திடீரென தீங்கு விளைவிப்பதாக, விஷமாக பார்க்கப்படுகிறது? என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் இப்போதெல்லாம், சர்க்கரை இரண்டு முக்கிய காரணங்களுக்காக தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது:
1. அதிகப்படியான நுகர்வு
நமது முன்னோர்கள் சர்க்கரையை ருசித்து மகிழ்ந்தனர். ஏனெனில் அவர்கள் சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே இனிப்புகளை உட்கொண்டார்கள். மேலும் அவை வீட்டில் தயாரிக்கப்பட்டவை என்று ஊட்டச்சத்து நிபுணர் சிம்ரத் கதுரியா சுட்டிக்காட்டுகிறார். இன்று, நம்மில் பெரும்பாலோர் கேக், பிஸ்கட் மற்றும் குக்கீகள் சர்க்கரை அதிகமுள்ள ஸ்நாக்ஸ் போன்றவற்றை எப்போதும் நம் வீடுகளில் வைத்திருக்கிறோம். நீங்கள் ஜங்க் ஃபுட்டை தவிர்த்தாலும், பழச்சாறுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் சில ஓட்ஸ் போன்ற அன்றாடப் பொருட்களில் சர்க்கரை நிரம்பியுள்ளது.
2. உட்கார்ந்த வாழ்க்கை முறைகள்
உங்கள் அன்றான வாழ்க்கையில் பெரும்பகுதியை ஒரே மேசையில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது போன்ற வேலை செய்பவராக இருந்தால் சர்க்கரை உணவுகளை உண்பது உங்களுக்கு இன்னும் மோசமாக உடல் நலப்பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும். சர்க்கரையை எரிக்க போதுமான உடல் செயல்பாடு (உடல் உழைப்பு) இல்லாவிட்டால், அது உங்கள் உடலை பாதிக்கத் தொடங்கும்.