நகம் சொத்தையா? கவலையே வேண்டாம்!

healthy tips...
healthy tips...
Published on

கம் கருமையுடன் சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால் விரைவில் சொத்தை மறைந்து புதுநகம் முளைக்கும்.

நன்கு முற்றிய பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி புளித்த மோரில் உப்பு சேர்த்து ஊறவிட்டு பின் வெளியே எடுத்து வெயிலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொண்டு உணவில் சேர்த்துக் கொள்ள பசியின்மை போகும்.

வாதநாராயணன் இலை, நொச்சி இலை, வேம்பு, முடக்கத்தான் இலை, புளிய இலை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பானைத் தண்ணீரில் போட்டு ஊறிய பின் கொதிக்க வைத்து தண்ணீரை இளஞ்சூட்டில் காலிலிருந்து மேலாக மெதுவாக ஊற்றி மசாஜ் செய்ய மூட்டுவலி கால்வலி விரைவில் குணமாகும்.

வில்வப் பூ மற்றும் எலுமிச்சை சேர்த்து ரசம் வைத்து சாப்பிட குடல் வலிமை பெறும்.

வசம்பு, சித்தரத்தை, ஜாதிக்காய், மாசிக்காய், சுக்கு, பூண்டு, பெருங்காயம் இவற்றை இலேசாக தணலில் சுட்டு உரை கல்லில் உரைத்து குழந்தையை குளிப்பாட்டி யதும் புகட்ட சளிப்பிடிக்காது.

மாதுளை சாற்றுடன் தேன் கலந்து 48நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

முட்டைக்கோஸ் சூப் சாப்பிட்டு வர உடலிலுள்ள கெட்ட கழிவுகள் நீங்குவதுடன் உடல் எடையும் குறையும்.

இதையும் படியுங்கள்:
இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் வெற்றியாளர்?
healthy tips...

படிகாரத்தை நீரில் கரைத்து தினமும் முகம் கழுவிட முகப் பருகினால் தோன்றிய வடுக்கள் மறையும்.

முருங்கைக்கீரை காம்புடன் ஐந்து கொத்து, 1துண்டு இஞ்சி, இரண்டையும் இலேசாக தட்டி 2டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வயிற்று புண், மலச்சிக்கல், குணமாகும்.உடல் உஷ்ணம் குறையும்.

தேங்காய் எண்ணையில் வசம்புத்தூள், வெள்ளை மிளகுத்தூளை கலந்து சிறிது சூடு செய்து தலையில் புழுவெட்டு உள்ள இடத்தில் தடவி வர வழுக்கை மறைந்து முடி வளரத் துவங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com