உங்களுக்கு அடிக்கடி நாக்கு வறண்டு போகிறதா? உஷாராக இருங்கள்!

Is the tongue often dry? Be careful
Is the tongue often dry? Be carefulhttps://www.lanka4.com

நாக்கு வறட்சி ஏற்படும்போது பொதுவாக நாம் நினைப்பது, ‘தண்ணீர் தாகம், உடல் வறட்சியால் நாக்கு வறட்சி ஏற்படுகிறது. தண்ணீர் குடித்தால் சரியாகும்’ என்ற புரிதல் மட்டுமே இருக்கும். ஆனால், ஒருவருக்கு தொடர்ச்சியாக நாக்கு வறட்சி ஏற்பட்டால் அதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

வாய் உலர்ந்து போதல் அல்லது ஸேரோஸ்டோமியா (xerostomia) என்பது உங்கள் வாயை ஈரமான நிலையில் வைக்கப் போதுமான உமிழ்நீர் உற்பத்தி செய்ய முடியாத ஒரு நிலையாகும். இது உங்கள் வாயில் நாள்பட்ட வறட்சியை ஏற்படுத்துகிறது. வாய் உலர்தல் என்பது வயது வந்தோருக்கு இந்நாளில் சாதாரணமாகத் தோன்றுகிறது. இந்த நிலை உமிழ்நீர் சுரப்பியின் செயல்படாத விளைவால் உருவாகிறது. இந்தச் சுரப்பிகள் செயல்பாட்டைத் தடுக்க பல காரணிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம்.

1. மருந்துகள்: மருந்து உட்கொள்வதால் வாய் வறட்சி ஏற்படுகிறது. மன அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுத்தும் பல மருந்துகள், வாய் உலர்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

2. வயது முதிர்ச்சி: வயது முதிர்ச்சியைப் பொறுத்து உடலின் இயக்கமானது மாறுகிறது. இது, பல்வேறு மருந்துகளின் நுகர்வுடன் சேர்ந்து, வயதானவர்களுக்கு வாய் உலர்தலை ஏற்படுத்துகிறது.

3. நரம்பு பாதிப்பு: உங்கள் தலையில் அல்லது கழுத்தில் காயமடைந்திருந்தால் நரம்பு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. உங்கள் தலைக்கு அருகில் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் நீங்கள் மேற்கொண்டிருந்தாலும் இது பொருந்தும். நரம்பு சேதத்தால் உங்கள் உமிழ்நீர் சுரப்பிகளின் செயல்பட்டில் இழப்பு ஏற்படலாம். வாய் உலர்தலுக்கு இதுவும் ஒரு காரணி.

4. புகை பிடித்தல்: புகைபிடிப்பது நேரடிக் காரணி இல்லையென்றாலும், அது ஏற்கெனவே இருக்கும் வாய் உலர்தலை மேலும் தீவிரப்படுத்தக்கூடும்.

5. மன அழுத்தம்: பெரும்பாலும் மன அழுத்தத்தைத் தொடர்ந்து பதற்றம் வருவது சகஜம். இதுவும் வாய் உலர்தலை தோற்றுவிக்கும் காரணங்களில் ஒன்றாகும். பதற்றம் மற்றும் எரிச்சல் போன்ற சூழ்நிலைகள் கூட வாய் உலர்தலை விளைவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
நினைவாற்றலை மிளிரவைக்கும் 7 கட்டளைகள்!
Is the tongue often dry? Be careful

6. காய்ச்சல்: காய்ச்சல் அல்லது நீரிழிவு போன்ற பிற சுகாதார நிலைகளின் விளைவாகவும் வாய் உலர்தல் ஏற்படலாம். எச்.ஐ.வி. / எய்ட்ஸ் மற்றும் அல்சைமர் நோய் போன்ற பல நோய்களின் பக்க விளைவு இந்த வாய் உலர்தலாகும். உலர்ந்த வாய் தைராய்டு நோயின் மிகவும் பொதுவான அறிகுறியாகும்.

7. கர்ப்பம்: உங்கள் உடல் கர்ப்ப காலத்தில் பல ஹார்மோன் மாற்றங்கள் வழியாக பயணிக்கிறது. சில சந்தர்ப்பங்களில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜீரண நீரிழிவு உருவாகிறது. இந்த காரணிகள் அடிக்கடி வறண்ட மற்றும் உலர்ந்த வாயை உருவாக்க வழிவகுக்கும்.

8. வாய்வழி மூச்சு: குறிப்பாக, தூங்கும்போது வாய் வழியாக மூச்சு விடுதல் வாய் உலர்தலுக்கு மற்றொரு முக்கியக் காரணம். இது முக்கியமாக இரவில் நடக்கிறது.

எனவே, அடிக்கடி வாய் உலர்ந்து போவதற்கான காரணத்தை அறிந்து அதற்கான உரிய சிகிச்சையை மேற்கொள்வது அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com