Child
ChildCredits : This is taimyr

உங்கள் குழந்தை எடை குறைவாக உள்ளதா? அப்ப இத ட்ரை பண்ணுங்க!

Published on

குழந்தைகளின் எடை குறைவுக்கு பல காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக கர்ப்பகாலத்தில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறாமல் குழந்தை எடை குறைவாக இருக்கலாம் அல்லது தாய்ப்பால் குடிக்காமல், குறைபிரசவம், சரியான முறையில் உணவுகளை சாப்பிடாமல் என பல காரணங்கள் இருக்கலாம்.  

தங்களின் குழந்தை உடல் எடை குறைவாக இருந்தால் பெற்றோர்களுக்கு அது மனஅழுதத்தை உருவாக்கிவிடும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அவர்களுக்கு கொடுப்பது சிரமமானதாக இருந்தாலும், அவர்களை ஆரோக்கியயமாக வைத்துக் கொள்ள பெற்றோர்கள் தான் பல முயற்சிகளை எடுக்க வேண்டும். 

உங்கள் குழந்தை எடைக்குறைவால், அடிக்கடி நோய்வாய்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்களின் எடையை அதிகரிக்க சத்தான பொருட்களை கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதோடு, அவர்களின் ஆரோக்கியத்திற்காக பிஸ்கட் போன்றவற்றையும் கொடுக்க தொடங்குவீர்கள்.

அந்த நேரத்தில், உங்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க பிஸ்கட்டுக்கு பதிலாக பாதாமை உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். பாதாமில் புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை எப்படி குழந்தைகளுக்கு ஊட்டலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Almonds
Almonds
இதையும் படியுங்கள்:
நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!
Child

குழந்தையின் எடை அதிகரிக்கும்

உங்கள் குழந்தையின் எடை அதிகரிக்க, 2 முதல் 3 பாதாம் பருப்பை எடுத்து இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலை, பாதாம் பருப்பின் தோலை உரித்து, அதை அரைத்துக் கொள்ளவும். அதன்பின், இந்த பேஸ்ட்டில் சிறிதளவு தண்ணீர் அல்லது தாய்ப்பாலை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். இந்த கலவையை உங்கள் குழந்தைக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால், நிச்சியமாக உங்கள் குழந்தையின் எடை அதிகரிப்பதோடு, குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கும்.

குழந்தைகளுக்கு பாதாமின் நன்மைகள்:

  • பாதாமில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் இருப்பதால் குழந்தையின் எடை அதிகரிப்புக்கு அது நன்மை பயக்கும்.

  • பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், இது அமிலத்தன்மை பிரச்சனையை குறைத்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

  • பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களைத் தடுக்கவும் உதவியாக இருக்கிறது.

  • பாதாமில் உள்ள அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம், குழந்தைகளின் பலவீனமான எலும்புகளை வலுப்படுத்தும்.

  • பாதாமில் மூளை வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இது உதவியாக இருக்கும்.

குழந்தைகளின் எடையை அதிகரிக்க நீங்கள் பாதாம் பருப்புகளை ஊட்டலாம். ஆனால் குழந்தைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் எடை குறைவு ஏற்பட்டாலோ, மருத்துவரின் ஆலோசனையை எடுத்துக் கொண்டு பாதாம் பருப்பை ஊட்டலாம். 

logo
Kalki Online
kalkionline.com