இதயத்தை பலப்படுத்தும் அருகுலா கீரை!

அருகுலா கீரை
Arugula Keeraihttps://tamil.oneindia.com

பார்ப்பதற்கு கடுகு கீரை போலவே இருக்கும் அருகுலா கீரை ஆயுர்வேதத்தில் பல்வேறு உடல் நலப் பிரச்னைகளுக்கு மருந்துகள் தயாரிக்கவும் அழகு சாதன தயாரிப்புகளுக்கும் பயன்படுகிறது. மெல்லிய காரச்சுவையும் சிறிது கசப்பு சுவையுடனும் இருக்கும் இந்தக் கீரையை ராக்கெட் கீரை என்றும் அழைப்பார்கள்.  

இந்தக் கீரையில் வைட்டமின் ஏ, கே, சி, ஈ மற்றும் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து, ஜிங்க் என ஏகப்பட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதில் அயோடின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதுடன் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச் செய்கிறது.

வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய சக்தி இந்தக் கீரைக்கு உண்டு. உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி டீடாக்ஸ் செய்ய உதவி புரிகிறது. மேலும், பொடுகு தொல்லையை போக்கவும், தலையில் வழுக்கை விழாமலும் தடுக்கிறது.

பெண்கள் கர்ப்ப காலத்தில் கூட இந்தக் கீரையை சாலட் வடிவிலோ, சூப்பாக செய்தோ சாப்பிடலாம். இதில் உள்ள ஃபோலிக் அமிலம் தாய் மற்றும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் சாதிக்க ரஷ்ய விஞ்ஞானி கூறும் 8 வழிகள்!
அருகுலா கீரை

அருகுலா கீரையை புதினாவுடன் சேர்த்து பேஸ் பேக்காக முகத்தில் போட பருத்தொல்லைக்கு சிறந்த தீர்வாக அமையும். தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் கண்டிஷனர்கள் தயாரிப்பிலும் இந்த அருகுலா கீரை பயன்படுத்தப்படுகிறது.

வைட்டமின் கே, சி போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால் இது நம் இதயத்தை பலப்படுத்துகிறது. ஒருசில ஆய்வுகளில் இது உடலில் கேன்சர் பாதிப்புகளை உருவாக்கக்கூடிய செல்களை அழிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வளவு சத்து மிகுந்த இந்தக் கீரையை மசியலாகவோ, சாலட்டாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிட்டு உடல் நலம் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com