தினம் வெறும் 5 ரூபாய் செலவு செய்தால்... வாழ்க்கையில் 5 லட்சம் வரை மிச்சப்படுத்தலாம்!

இதன் விலை குறைவு என்றாலும் அதிலுள்ள ஊட்டச்சத்துகளில் எந்தக் குறையும் இல்லை. முக்கியமாக பல பழங்களில் உள்ள ஊட்டச்சத்தை இந்த ஒரு பழமே கொண்டுள்ளது.
Banana Health benefits
Banana benefits
Published on

யற்கையின் பெருங்கொடைகளில் ஒன்று, இனிப்பு நிறைந்த பழங்கள். இந்த பழங்களில் இனிப்பான சுவை மட்டுமின்றி ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்து உள்ளன. அதனால், பொதுவாக பழங்கள் அனைத்தும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. ஒரு கிலோ பழங்களின் விலை சராசரியாக ₹200 ஆக உள்ளது. அதே நேரம் வாழைப்பழம் எப்போதும் மலிவு விலையில் கிடைக்கும் ஒரே பழமாக இருக்கிறது.

வாழைப்பழம் (Banana) இன்னும் சில ஊர்களில் 2 ரூபாய்க்கு கிடைக்கிறது. நகர்ப்புறம் மற்றும் பெரு நகரங்களில் தோராயமாக ஒரு வாழைப்பழம் ₹5 அளவில் விற்கப்படுகிறது. இதன் விலை குறைவு என்றாலும் அதிலுள்ள ஊட்டச்சத்துகளில் எந்தக் குறையும் இல்லை. முக்கியமாக பல பழங்களில் உள்ள ஊட்டச்சத்தை இந்த ஒரு பழமே கொண்டுள்ளது.

1. உடனடியாக கிடைக்கும் ஆற்றல்

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் , சாதாரண அளவுக் கொண்ட இரண்டு வாழைப்பழங்கள் 90 நிமிட கடின உழைப்பிற்குத் தேவையான ஆற்றலை வழங்க கூடியவை. இதன் காரணமாகவே விளையாட்டு வீரர்களும் உடற்பயிற்சி ஆர்வலர்களும் இதனை ஒரு சிறந்த 'எனர்ஜி பூஸ்டராக' கருதுகின்றனர்.

வாழைப்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள் அதிக அளவில் உள்ளன. இவை உடனடியாக ரத்தத்தில் கலந்து உடனடி ஆற்றலை வழங்குகின்றன.

2. செரிமான மண்டலத்தின் நண்பன்

வாழைப்பழத்தில் உள்ள ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் என்னும் வேதிப்பொருள் ஒரு இயற்கை பிரிபயாடிக்காக செயல்பட்டு, குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள பெக்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் குடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.

3. புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் படி, தோலில் கறுப்புப் புள்ளிகள் உள்ள நன்கு கனிந்த வாழைப்பழத்தின் தோலில் Tumor Necrosis Factor எனப்படும் ஒரு புரதப்பொருள் உருவாகிறது. இந்த மருத்துவ பொருள் உடலில் உள்ள அசாதாரணமான செல்கள் மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது என்று கண்டறிந்துள்ளனர். இது குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதாக நவீன மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. இதயம், ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம்

அதிக சோடியம் இரத்த அழுத்த நோயையும், இதய பாதிப்பையும் ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. சராசரியாக ஒரு வாழைப் பழத்தில் 422 மி.கி வரை பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சோடியத்தைக் குறைக்கும் பண்பு கொண்டது. அமெரிக்க இதயச் சங்கத்தின் ஆய்வின்படி, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பது, ரத்த நாளங்களின் இறுக்கத்தைத் தளர்த்தி, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 24% வரை குறைக்கிறது.

5. எலும்பு உறுதி

இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சும் திறனை அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்புத் தேய்மான நோய்களைத் தடுக்கிறது.

6. கர்ப்ப கால ஆரோக்கியம்

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் B6 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் காலை நேரக் குமட்டல் வருவதை குறைக்கிறது. அவர்களின் உடலில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை தளர்வாக்கவும் இந்த வைட்டமின் பெரிதும் உதவுகிறது. மேலும், கருவின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் துணை புரிகிறது.

7. நோய் எதிர்ப்புச் சக்தி

வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலின் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
'யானை ஆப்பிள்' இதன் ரகசிய குணங்களைக் கேட்டால் வியந்து போவீர்கள்!
Banana Health benefits

8. மனநிலை ஆரோக்கியம்

வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் எனும் அமினோ அமிலம், உடலில் 'செரோடோனின்' எனும் மகிழ்ச்சி தரும் ஹார்மோனாக மாறுகிறது. இந்த ஹார்மோன் மனதை மகிழ்ச்சியாக வைக்க அத்தியாவசியமானது, மேலும் தூக்கமின்மையை நீக்கி, மன அழுத்தத்தைக் குறைத்து ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவுகிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com