வெள்ளை சீனிக்கு பதிலாக வெல்லம் மற்றும் தேன் இவற்றை அதிகம் மக்கள் பயன்படுத்துகிறார்கள். வெல்லத்தில் இரும்புச் சத்து, மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால் நோயெதிர்ப்பை அதிகரித்தும், செரிமானத்தை சீர் செய்தும், கல்லீரல் நச்சுக்களையும் நீக்குகிறது. அது மட்டுமல்லாமல் ரத்தச் சோகையையும் தடுக்கிறது. அத்தகைய வெல்லத்தில் கலப்படம் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.
Food Safety And Drug Administration FDA சமீபத்தில் பெங்களூரில் சில வெல்லங்களை சோதனை செய்த போது அதில் வாஷிங் சோடா மற்றும் சாக் பௌடர் சேர்க்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது இரண்டும் வெல்லத்திற்கு கோல்டன் மஞ்சள் நிறம் தருவதற்கும், எடையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறதாம்.
இந்தக் கலப்படத்திற்குக் காரணம் பண்டிகை நாட்களில் அதிக பூரன் போளி தயாரிக்க வேண்டியுள்ளதால் இந்த கலப்படம் நடப்பதாக அறியப்படுகிறது. போளி தயாரிக்கும் கடைகள் பாலையும் எண்ணையையும் ப்ளாஸ்டிக் ஷீட்டுகளில் பேக் செய்கிறார்கள். போளியை அவர்கள் ப்ளாஸ்டிக் ஷீட்டில் தட்டி கல்லின் மீது போட்டு போளி சூட்டில் பிரிந்து கல்லில் விழுந்ததும் எடுக்கிறார்கள். இதனால் சூடான ப்ளாஸ்டிக்கிலிருந்து நஞ்சு உணவில் சேர்ந்து விடுகிறது. இந்த ப்ளாஸ்டிக்கில் ஃப்தாலேட்ஸ், bisphenoils மற்றும் டைஆக்சின் போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல்களால் உடம்பில் ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
வாஷிங் சோடா பக்க விளைவுகள்:
இது சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் பொருள். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. இது வாய் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் வாந்தி, வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தும். அல்சரையும் உண்டாக்கக் கூடும்.
மெடானில் மஞ்சள் ஒரு சின்தெடிக் உணவுக் கலராகும். இது பல இனிப்புகள், மஞ்சள் மற்றும் பருப்புகளில் கலக்கப்படுகிறது. இது வயிற்று வலி, வாந்தி வயிற்றுப் போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடியது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தையும் செயலிழக்கச் செய்யும். மேலும் மெடானில் மஞ்சள் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.