பாம்புக்கடியால் இறந்தவர்களில் பலர் பயத்தால் இறந்தவர்களே! பாம்பு கடித்தால்...

பாம்புக்கடி
பாம்புக்கடி
Published on

‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்கிற பழமொழி நம்மிடையே உண்டு. இதற்கு மிக முக்கியமான காரணம், பாம்பு கொடிய விசமுடையது என்பதுதான். உலகில் பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன என்றும், அவற்றில் சுமார் 600 இனங்கள் வரை நச்சுப் பாம்புகள் என்றும் சொல்லப்படுகின்றது. உலகில் ஆண்டுதோறும் 1, 25 ,000 மக்கள் வரை பாம்புக்கடியால் இறக்கின்றனர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை. இந்தியாவில் இருக்கும் பாம்புகளில் இந்திய நாகம் (Naja naja), எண்ணெய் விரியன் எனப்படும் கட்டு விரியன் (Bungarus caeruleus), சுருட்டைப் பாம்பு (Echis carinatus), கண்ணாடி விரியன் (Daboia russelii) எனும் நான்கு பாம்புகளே மிகவும் ஆபத்தான நச்சுப் பாம்புகளாக இருக்கின்றன. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் மிகப்பெரும்பாலான இறப்புக்களுக்கு இந்த நான்கு பாம்புகளேக் காரணமாக இருக்கின்றன. எனவே, இந்த நான்கு பாம்புகளை, ‘பெருநான்கு’ (Big Four) என்று வகைப்படுத்துகின்றனர்.

2020 ஆம் ஆண்டு இந்தியாவில் பாம்பு கடித்தது பற்றி விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 43 % பாம்பு கடியானது கண்ணாடி விரியன் பாம்பினாலும், இதைத் தொடர்ந்து 18 % பாம்புக்கடி விரியன் பாம்புகளினாலும், 12% பாம்புக்கடி நாகப் பாம்புகளாலும், 4 % மூக்கு விரியன் பாம்புகளாலும், 1.7 % சுருட்டை விரியன் பாம்புகளாலும், 0.3% நீர் பாம்புகளினாலும் ஏற்பட்டுள்ளது. சுமார் 21% பாம்புக்கடியில் பாம்புகள் அடையாளம் காணப்படாத இனங்களாக உள்ளன.

பாம்புக் கடித்து விட்ட நிலையில் முதலில் செய்ய வேண்டியவை இவைதான்:

* காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில், அதாவது குழாயடி நீர் அல்லது குளியலை நீரில் காண்பிக்க வேண்டும். ஓடும் நீர் கிடைக்காவிடின் ஓர் வாளியில் நீரை எடுத்து காயத்தின் மேலிருந்து சிறிது உயரத்திலிருந்து ஊற்றி நீரை ஓட விட வேண்டும். சோப்பு போட்டு மூன்று முறை கழுவ வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அதென்ன‌ நாற்பது வயதில் நாய்க் குணம்... ஆண்களுக்கு மட்டும் தானா?
பாம்புக்கடி

* பாம்புக் கடிக்குள்ளானவரை அச்சமின்றி இருக்கச் செய்ய வேண்டும். அவரின் இதயத்துடிப்பை எந்த அளவிற்குக் கட்டுப்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு அவரைக் காப்பாற்ற முடியும்.

* கடித்த பாம்பு பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். சில வேளைகளில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். அப்படியொரு நிலையில், பாம்பின் தலையில் அடித்துக் கொல்லக் கூடாது. ஏனெனில், பாம்பின் தலையை வைத்தேப் பாம்பை இனம் காண முடியும். இருப்பினும், பாம்பைத் தேடுவதில் நேரத்தை வீண் செய்யாமல், விரைவில் பாம்பு கடிபட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

* பாம்பு கடிபட்டவரை நடத்திக் கூட்டிச் செல்லக்கூடாது. அதனால், அவரது இரத்த ஓட்டம் அதிகரித்து விசம் விரைவில் அவரது இதயத்தைத் தாக்கக்கூடும்.

பாம்புக் கடித்து விட்ட நிலையில் செய்ய வேண்டாதவை என்றும் சில இருக்கின்றன.

* பாம்பு கடித்த இடத்தின் அருகில் கட்டுப் போடக்கூடாது. கட்டுப் போடுவதன் மூலம் சில சமயங்களில் விசம் ஓரிடத்திலேயே தங்கக்கூடும்.

* பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சக் கூடாது. வாயில் புண் இருந்தால் அதன் வழியாக உறிஞ்சுபவருக்கும் விசம் பரவக் கூடும். நாக்கு, விரைவாக உறிஞ்சக் கூடிய உறுப்பு என்பதால், அதன் வழியாக விசம் உறிஞ்சுபவருக்குப் பரவக்கூடும்.

* பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவரை பதற்றமடையச் செய்யக் கூடாது. பதற்றமடைந்தால் இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்து, விசம் விரைவாக உடலில் பரவக்கூடும். இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவருக்கு, ஆறுதல் தரும் வார்த்தைகளைப் பேசியபடியே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

* பாம்பு கடித்துக் காயமடைந்த இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிக்கக் கூடாது. கூரிய ஆயுதங்களால் கிழித்தால், மருத்துவர் பாம்பு கடித்த இடத்தை அடையாளம் காண முடியாமல் போகும். மேலும், கிழிக்கப்பட்ட இடத்திலிருந்து கூடுதலான இரத்தம் வெளியேறியோ அல்லது ஆயுதங்கள் துருப்பிடித்திருந்தால் அதன் வழியாகவும் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.

* பாம்புக் கடிபட்டவருக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி, வேறெந்த மருந்தையும் உட்கொள்ளச் செய்யக்கூடாது.

பொதுவாக, பாம்பின் விசம் அதன் பல்லில் இல்லை. பாம்பு கொத்தும் போது, பாம்பின் விசம் பாம்பின் வாய்ப் பகுதியில் இருந்து பீச்சியடிக்கப்படும். இது பாம்பின் நிலையைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக் காட்டாக, ஆண் பாம்பும் பெண் பாம்பும் இணையும் நிலையில் கொத்துமானால் கூடுதல் விசத்தைக் கக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பாம்புக்கடியால் இறந்தவர்களில் பலர் பாம்பு விசத்தால் இறந்தவர்களில்லை, அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தால் இறந்தவர்களே! என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, பாம்புக் கடித்தவர்களைப் பதற்றமின்றிக் காப்பாற்ற முயற்சிக்கலாம்!

இதையும் படியுங்கள்:
உங்கள் பட்டுப்புடவையில் கறையா? கவலையை விடுங்க. இதோ, நீங்களே நீக்க 4 எளிய வழிகள்!
பாம்புக்கடி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com