Jalebi eaters beware.
Jalebi eaters beware.

ஜிலேபி அதிகம் சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதை!

Published on

ஜிலேபி என்று சொன்னாலே அனைவருக்கும் நாவூறும். இனிப்பு சாப்பிட வேண்டும் என்றாலே பலரும் ஜிலேபியைதான் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், இதை அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் என உங்களுக்குத் தெரியுமா? அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சுதானே!

ஜிலேபி என்பது இனிப்பு வகைகளில் ஒன்று என்பதைத் தாண்டி ஒரு கலாசாரத்தின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. என்னதான் இந்த இனிப்பு வகை இந்தியாவில் தோன்றியது இல்லை என்றாலும், உலகெங்கிலும் பிரபலமாக இதை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், இதை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தீமைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நன்மை என்று பார்க்கும்போது ஜிலேபி சாப்பிடுவதால் ஒற்றைத் தலைவலி பிரச்னை நீங்கும் எனச் சொல்கிறார்கள். சூடான பால் மற்றும் ஜிலேபி சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலி நீங்குமாம். அதே நேரத்தில், நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒற்றைத் தலைவலிக்காக ஜிலேபி சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

ஜிலேபி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்:

பொதுவாகவே, சர்க்கரை கலந்த உணவுகள் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலைத் தந்து இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். எனவே, இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். என்னதான் ஜிலேபி உங்களுக்குப் பிடித்த இனிப்பு வகையாக இருந்தாலும், அதை சரியான அளவு எடுத்துக்கொள்வது அவசியம். இதை அதிகமாக சாப்பிடும்போது நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் உடற்பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும் உணவுகள்!
Jalebi eaters beware.

ஜிலேபி, எண்ணெயில் செய்யப்படும் ஒரு பலகாரமாகும். இந்த பலகாரம் செய்யப்படும் எண்ணெயில் அதிகப்படியான ட்ரான்ஸ் கொழுப்பு உள்ளது. இது ஒரு கெட்ட கொழுப்பு. இது அதிகரித்தால் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஜிலேபி மைதா மாவில் செய்யப்படுவதால் அது மலச்சிக்கல் பிரச்னையை ஏற்படுத்தலாம். மேலும், இதனால் அஜீரணக் கோளாறு, உயர் இரத்த அழுத்தம், இதய பாதிப்புகள் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் நார்ச்சத்துக்களும் குறைவாக உள்ளதால், பசியை மேலும் தூண்டி உங்களை அதிகம் சாப்பிட வைத்து உடல் எடையைக் கூட்ட வழிவகுக்கும்.

எனவே, ஜிலேபி மட்டுமின்றி, வேறு எந்த வகை இனிப்பாக இருந்தாலும் அதை அளவுடன் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

logo
Kalki Online
kalkionline.com