
பெண்கள் தலைக்கு சூடிக் கொள்ள அதிகம் விரும்புவது நறுமணம் நிறைந்த மல்லிகைப் பூவைதான். அழகிய வெண்மை நிறத்துடன் மிகவும் சிறியதாகவும், அதே நேரம் நறுமணத்துடன் கூடியதாகவும் இருக்கிறது. மல்லிகை செடி இந்தியா, சீனா , ஐரோப்பா, அமெரிக்கா, கரீபியன் மற்றும் பசிபிக் தீவுகள் போன்ற வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இத்தகைய மல்லிகைப் பூவை வைத்து ஒரு இந்திய நிறுவனம் ஆராய்ச்சி செய்து அதன் மருத்துவக் குணங்களை கண்டறிந்துள்ளது.
மல்லிகைச் செடி ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்து மூலமாகும். தாவரங்களில் காணப்படும் டானின்கள், ஆல்கலாய்டுகள், பீனாலிக்ஸ் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற தனிமங்கள் , பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிப்பதில் வல்லமை பெற்றுள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அவை உடலுக்கு ஏற்படுத்தும் சேதத்தையும் குறைக்கலாம். மல்லிகைப் பூக்களின் நன்மைகள் குறித்து பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதன் முடிகளை இங்கு காண்போம்.
மல்லிகைப் பூ ஒலியேசியே என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. உலகளவில் சுமார் 197 மல்லிகை இனங்கள் காணப்படுகின்றன. மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி ஆயுர்வேதத்தில் குறிப்புகள் உள்ளன. இவை சரும நோய்கள் மற்றும் கண் நோய்களுக்குப் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், அதன் இலைகள் மார்பக புற்றுநோய் மருத்துவத்தில் உதவுகின்றன.
மல்லிகையில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராகப் மனிதர்களை பாதுகாப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மல்லிகைச் செடி ஆண்டிபயாடிக் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடி இந்த இரண்டு பிரச்சனைகளையும் கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
மல்லிகைச் செடிகள் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிரான பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகின்றன. ஜாஸ்மினம் கிராண்டிஃப்ளோரம் மற்றும் ஜாஸ்மினம் சாம்பாக் போன்ற மல்லிகை செடி தாவரங்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் மோசமடையும் தன்மையை வெகுவாகக் குறைக்கின்றன். பொதுவாக மனித உடல் ஆக்ஸிஜன் மூலம் உடலுக்குத் தேவையான ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகிறது. இவை உடலுக்கு அவசிய தேவை என்றாலும் ,அதே நேரம் அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல்களின் உற்பத்தி டிஎன்ஏக்களிலும் புரதங்களிலும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது கொழுப்புகளிலும் ஆக்ஸிஜனேற்ற விளைவை ஏற்படுத்துகிறது.
இதுவே புற்றுநோய், இதய நோய் மற்றும் வயது தொடர்பான பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாகும். புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஃப்ரீ ரேடிக்கல்களின் அதிகரித்த செயல்பாடு ஆகும். மல்லிகைச் செடிகளில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் இந்த நிலையை பெருமளவில் குணப்படுத்தும் தன்மை கொண்டவை. இவை ஃப்ரீ ரேடிக்கல்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்துகின்றன.
மல்லிகை வகையை சார்ந்த ஜாஸ்மினம் அசோரிகம் இலைகளின் அசிட்டோன் சாறு, ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸுக்கு எதிராக 30 மி.மீ. செயல்திறன் கொண்டது என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. இது மிக உயர்ந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் உருவாக்கியது. ஜாஸ்மினம் சிரிஞ்சிஃபோலியம் மெத்தனால் சாறு ஷிகெல்லா ஃப்ளெக்ஸ்னெரிக்கு எதிராக 22.67 மிமீ தடுப்பு மண்டலத்தைக் ஏற்படுத்தியது.
ஜாஸ்மினம் அஃபிசினேல் வகை மல்லிகை செடியில் இருந்து வலி நிவாரணி, டையூரிடிக், மன அழுத்த எதிர்ப்பு மருந்து மூலங்கள் காணப்படுகின்றன. ஜாஸ்மின் சாம்பாக்கில் கிருமி நாசினி, இருமல் , சளி, இருமல் கருப்பை நோய்களுக்கு நன்மை பயக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.