

நம்மில் பல பேருக்கு 'எதற்காக குளிக்கிறோம்?' என்பதே தெரிவதில்லை. அழுக்கு போகவா? நிச்சயம் கிடையாது..! சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா?
உடலை குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்க நம் முன்னோர்கள் நம்மை பழக்கப்படுத்தியுள்ளனர்.
குளிக்கும் முறை என்ன?
குளிக்கும் போது குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
எதற்கு இப்படி?
காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வருவோம். குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா? உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள். இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும். எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது. அதனால் பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும். குளித்து முடித்தவுடன் துவட்டும் துண்டு கொண்டு முதலில் முதுகை மேலும் கீழும் இழுத்து துவட்டி பிறகு உடலின் ஒவ்வொரு பகுதியாக துவட்டி கடைசியில் தலையை துவட்டுவதை பல பெரியவர்கள் செய்வதை பார்த்திருப்பீர்கள்.
இது எதற்கு தெரியுமா?
உடலின் அக்குபங்க்சர் புள்ளிகளை தூண்டிவிடத்தான்.
குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன். குளிக்க மிகச் சிறந்த நீர் - சாதாரண தண்ணீர், வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
காலை எழுந்ததும் உற்சாகமாக நாளை துவக்க உதவும் வகையில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது முதல் புத்துணர்ச்சி அளிப்பது வரை பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துவதற்காக குளிர்ந்த நீர் குளியல் பல காலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
குளிர்ந்த நீரில் குளிப்பது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த உதவும். இதில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியும் அடங்கும், இது ரத்த சர்க்கரையை நிர்வகிப்பதிலும் நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதிலும் பங்கு வகிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். சிறிது நேரம் குளிர்ந்த நீரில் குளிப்பது உடலில் சில ப்ராசஸ்களை செயல்படுத்த கூடும், இதனால் நம் உடல் தசைகள் குளுக்கோஸை மிகவும் சிறந்த முறையில் எடுத்து கொள்ளவும், ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
குளிந்த நீர் குளியலானது பிரவுன் அடிபோஸ் டிஷ்யு (Brown adipose tissue)-வை ஆக்டிவேட் செய்கிறது, இது ஒரு சிறப்பு கொழுப்பு ஆகும், இது கலோரிகளை எரித்து வெப்பத்தை உருவாக்குகிறது. குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலில் நடைபெறும் இந்த செயல்முறை தசைகள் மற்றும் கொழுப்பு செல்கள் குளுக்கோஸை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது, இது காலப்போக்கில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்தும். சில ஹார்மோன்களை வெளியிடுகிறது மற்றும் செல்லுலார் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் பாதைகளை நெறிப்படுத்துகிறது மற்றும் சிஸ்டமேடிக் இன்ஃப்ளமேஷனை குறைக்கிறது. இந்த ஒட்டுமொத்த விளைவுகள் மூலம் உடல் இன்சுலினுக்கு தூண்டும் சக்தியை அதிகரிக்கும் என்கிறார்கள். தினமும் குளிப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி உடலில் ஏற்படும் தசை மற்றும் மூட்டு வலியை குறைக்கிறது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்முறைகளை மேம்படுத்தி அதன் ஆரோக்கியம் காக்கிறது.
காய்ச்சல் இருந்தால் குளிக்கலாமா?
அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க. உண்மையில், காய்ச்சலின் போது உடல் வெப்பநிலை உயர்கிறது. உடல் வெப்பநிலையை குறைக்க குளிப்பது அவசியம். தேவைப்பட்டால் தலைக்கு குளிக்கவும் செய்யலாம். காய்சல் நேரத்தில் குளிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது இருப்பினும் வெதுவெதுப்பான அல்லது சாதாரண தண்ணீரை பயன்படுத்துவது சிறந்தது.
தற்போதைய வெப்ப அலையில் இரவிலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதனால் உறக்கமும் தடைபடுகிறது. இதனால், இரவில் உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் செயல்முறையும் தடைபடும். இந்தப் பிரச்னையைத் தீர்க்க, இரவில் ஒரு குளியல் போட்டு விட்டு தூங்குவது நல்லது.