
கமர்காஸ் என்பது பலாஷ் கோண்ட் ஆகும். பலாஷ் மரப் பட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இயற்கையான கம் பிசின் ஆகும். இது உடல்வலி தசை வலிகளை போக்கக்கூடியது. டானின் சத்து நிறைந்திருக்கும் இது அழற்சி எதிர்ப்பு பண்புள்ளது. எலும்புகளை வலுப்படுத்தவும் தசைகளை மீட்டெடுக்கவும் உதவுகிறது. இது ஆரோக்கிய நன்மைகளைக் தருகிறது.
இதில் பயோஆக்டிவ் சேர்மங்கள் நிறைந்துள்ளன. இது உடல் வலியின் முக்கிய ஆதாரமான வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அழற்சியை தடுப்பதன் மூலம் மூட்டுவலி மற்றும் தசை வலிகளைக் குறைக்கிறது.
இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு வருகிறது.
பெண்களின் மாதவிடாய் காலங்களில் வயிறு வலி, முதுகு வலியைக் குறைக்கிறது. இடுப்புப்பகுதி வீக்கத்தைக் குறைக்கிறது.
இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவைகள் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் கீல்வாதத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கமர்காஸ் செரிமானக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. வயிற்றுப் போக்கையும் தடுக்க வல்லது.
இதன் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் தொற்று நோய்களை தடுக்கும் சக்தி வாய்ந்தது.
பெண்களின் பிரசவத்திற்குப் பின் திசு மீட்சியில் முக்கிய பங்கு பெறுகிறது. கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இதன் ஊட்டச்சத்து முடி ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. நீண்ட வலுவான கூந்தலை அடையச் செய்கிறது.
இதில் உள்ள வைட்டமின் K சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் வெப்பத்தை சீராக வைக்கவும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கமர்காஸ் கம், வெல்லம், நெய், பேரீச்சம்பழம் மற்றும் கொட்டைகள் முதலியன சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இந்திய உணவு. இது இயற்கையான ஆற்றல் தருகிறது.