நம் வீட்டில் தயாரிக்கும் இனிப்பு உணவுகளில் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதற்கு பதிலாக கருப்பட்டியை கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கால்சியம் அதிகம் கிடைத்து பல நோய்களை போக்கலாம். எப்படி? பார்ப்போமா?
கருப்பட்டியில் வெறும் இனிப்பு சுவை மட்டுமில்லை. அதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன.
கருப்பட்டியை சாப்பிட்டால் நம் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சீரான நிலையில் இருக்கும். அதனால் தான் கருப்பட்டியை ஒரு துண்டு சாப்பிட்டால் கூட உடலுக்கு நல்லது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
சீரகம் அல்லது சோம்பு சேர்த்த நீரை கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். கோடைகாலத்தில் இப்படி குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். உடல் சூட்டினால் வரும் நோய்கள் நம்மை அண்டாது.
பால் சூடானதும் அதை டம்ளரில் ஊற்றி பனங்கற்கண்டு, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் ஆகியவை கலந்து குடித்தால் தொண்டைப்புண் சரியாகும். சிலருக்கு மூலநோய் அவஸ்தை இருக்கும். அவர்களும் இதனை பின்பற்றலாம். கருப்பட்டிக்கு வயிற்று புண்களை ஆற்றும் சக்தி உண்டு.
வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓமத்துடன் கருப்பட்டியை சாப்பிட வேண்டும். நல்ல தீர்வு கிடைக்கும்.
கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பருவம் எய்திய பெண்கள் உளுந்த மாவுடன், கருப்பட்டி சேர்த்து உளுந்தங்களி சாப்பிட்டால் இடுப்பு எலும்புகள், கருப்பை வலுவாகும். ரத்தப்போக்கு சீராக இருக்கும்.
கருப்பட்டியை தட்டி நல்லெண்ணெய் விட்டு கேப்பைக்களி சாப்பிட்டால் உடலும் வெயிட் போடாது.
மேலும் கருப்பட்டி, கேப்பை இவை இரண்டிலும் கால்சியம் ஹீமோகுளோபின் அதிகம் உள்ளது. களி கிண்ட தெரியலயா கவலைய விடுங்கள். கேப்ப ரொட்டி சுட்டு விடலாம். கருப்பட்டியும் கேப்பமாவையும் கலந்து தோசைக்கல்லில் தட்டி நல்லெண்ணெய் இருபுறமும் நிறைய விட்டு சுட்டு சாப்பிட்டீங்கன்னா அயர்ன் மாத்திரை டானிக் இவையெல்லாம் தேவையில்லை
பூண்டுக் குழம்பில் கடைசியில் கீழே இறக்கும்போது ஒருதுண்டு கருப்பட்டியும் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெயும் ஊற்றினால் சத்தாகவும், சுவையாகவும் இருக்கும்..
மாதவிடாய்க்கு பின் பெண்கள் கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து சாப்பிடலாம். இது அவர்களின் கர்ப்பப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தி வலுப்பெற உதவும்.
அதே போல கர்ப்ப காலத்தில் பெண்கள் கருப்பட்டி உட்கொண்டால் உடலில் உள்ள இரைப்பை குடல் பிரச்சினைகள் குறையும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு உணவு செரிமான பிரச்சனைகளை சரி செய்ய கருப்பட்டி உதவுகிறது.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.
சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
கருப்பட்டி சாப்பிடுவது வயதானவுடன் ஏற்படும் அறிவாற்றல் குறைவைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இது தவிர, மூளை செல்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது மற்றும் நரம்பியல் பாதுகாப்பிலும் ஈடுபட்டுள்ளது.
கருப்பட்டியில் வெவ்வேறு பாலிபினால்கள் இருப்பதால் இது மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன்களையும் வெளியிடுகிறது.
எனவே, கருப்பட்டியை அற்புதமான ‘மூளை உணவு’ என்று அழைக்கலாம், இது அறிவாற்றல் செயல்திறன், விழிப்புணர்வு மற்றும் ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.