சைனஸ் பிரச்சனையை அடித்து விரட்டும் அற்புதக் கசாயம்! 

Sinus problems
Sinus problems
Published on

சைனஸ் என்பது நம் மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். இதில் அலர்ஜி பிரச்சனை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக சைனஸ் இருக்கிறது. இது பெரும்பாலும் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் ஒன்றாகும். மேலும் அதிகப்படியான குளிர்பானங்கள், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகிறது. முகத்தில் வலி, அதிகப்படியான சளி, சுவாசப் பிரச்சனை போன்றவை சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள். 

நீங்களும் சைனஸ் பிரச்சினையால் அவதிப்படும் நபராக இருந்தால், எளிதான வீட்டு வைத்திய முறையிலேயே அதை சரி செய்ய முடியும். அதற்கு உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி. இந்த மூன்றையும் பயன்படுத்தி கசாயம் செய்து சாப்பிட்டால் விரைவில் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

செய்முறை

முதலில் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து, நன்கு காய வைத்து, பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு போட்டு நன்றாகக் கொதிக்க விடுங்கள். பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு வேறு ஒரு கிளாஸில் வடிகட்டினால், சைனஸ் பாதிப்பை குணமாக்கும் அற்புத பானம் தயார்.

இதையும் படியுங்கள்:
குறட்டைப் பிரச்னை கொண்ட கதாபாத்திரத்தில் கலக்கிய ‘குட் நைட்’ பட கதாநாயகன்!
Sinus problems

இந்த கசாயத்தை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடியுங்கள். நிச்சயமாக சைனஸ் பாதிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும். அதேநேரம் மூலிகைப் பொடியை அதிகமாக கலந்து கஷாயம் தயாரிக்க வேண்டாம். ஒரு ஸ்பூன் மூலிகைப் பொடி பயன்படுத்துவது நல்லது. அதிகமாகக் குடித்தால் வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்பதால், இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவதற்கு முன் தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com