மூட்டு வலி உள்ளவர்களுக்கு ஏத்த பாட்டி வைத்தியம்! 

Knee Pain
Knee Pain Remedies

இன்றைய காலத்தில் மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு மட்டுமின்றி இளையவர்களுக்கும் ஏற்படுகிறது. இது மூட்டு தேய்மானம், வாத நோய் மற்றும் காயம் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்க பல நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும் பாட்டி வைத்தியம் எனப்படும் பாரம்பரிய வீட்டு வைத்திய முறைகளும், பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த பதிவில் மூட்டு வலிக்கு பயனுள்ளதாக கருதப்படும் சில பிரபலமான பாட்டி வைத்தியங்களைப் பற்றி பார்க்கலாம். 

இஞ்சி: இஞ்சி வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலியை சரி செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, இஞ்சியை உணவாக எடுத்துக்கொள்வது மற்றும் பேஸ்ட் போல கால் மூட்டுகளில் தடவுவது, மூட்டு வலிக்கு நிவாரணமளிக்க உதவும். 

மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள் வீக்கத்தைக் குறைத்து மூட்டுவலியை சரி செய்யும் திறன் கொண்டது. எனவே உங்களது உணவில் தினசரி மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது பால் மற்றும் மஞ்சள் கலவையை தினசரி குடித்து வந்தால் மூட்டு வலியின் தீவிரத்தன்மை குறைய ஆரம்பிக்கும். 

வேப்பிலை: வேப்பிலை அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகளுக்கு பெயர் பெற்றது. எனவே, வேப்பிலை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டுகளில் தேய்த்து வந்தால், விரைவில் மூட்டு வலி குணமாகும். 

எண்ணெய் தேய்த்தல்: மூட்டு வலியில் இருந்து விடுபட நல்லெண்ணையை சூடாக்கி மூட்டுகளில் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். அல்லது நல்லெண்ணெய் மற்றும் கற்பூரம் சேர்த்து மூட்டுகளில் தேய்ப்பதால் அது வீக்கத்தைக் குறைத்து வலியை சரி செய்ய உதவும். 

இதையும் படியுங்கள்:
மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 
Knee Pain

உணவு மாற்றங்கள்: மூட்டு வலி உள்ளவர்கள் கொழுப்பு மீன்களை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அதில் உள்ள ஒமேகா 3  கொழுப்பு அமிலங்கள் மூட்டு வலியை சரி செய்ய உதவும். வாரத்திற்கு 2-3 முறை மீன் சாப்பிடுவது நல்லது. மேலும், சரிவிகித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை கட்டாயம் சாப்பிட வேண்டும். அவற்றில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மூட்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. 

இத்துடன் நீங்கள் சில வாழ்க்கைமுறை மாற்றங்களையும் செய்ய வேண்டும். அதாவது, தினசரி கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் மூட்டுக்கள் வலுவாகி அதன் இயக்கத்தை மேம்படுத்த உதவும். மேலே, குறிப்பிட்ட பாட்டி வைத்திய முறைகளை நீங்கள் முறையாகப் பின்பற்றி வந்தாலே, முற்றிலும் இயற்கையான முறையில் மூட்டு வலியிலிருந்து விடுபடலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com