பிளாஸ்டிக் சர்ஜரியின் நன்மைகள் பற்றி தெரியுமா?

ஜூலை 15, உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம்
plastic surgery
plastic surgeryhttps://www.mayraskinclinic.com
Published on

ன்று உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் கொண்டாடப்படுகிறது. பிளாஸ்டிக் சர்ஜரியின் தாயகம் இந்தியா என்பதில் நாம் அனைவரும் பெருமைகொள்ள வேண்டும். 800 ஆண்டுகளுக்கு முன்பு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்திய இந்திய மருத்துவர் சுஷ்ருதர், ‘பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை’ என்று அறியப்படுகிறார். ‘சுஷ்ருத சம்ஹிதா’ என்ற தனது நூலில்  உடலின் பல பாகங்களை புனரமைக்க பயன்படுத்தப்படும் நுட்பங்கள் பற்றி அவர் விரிவாக எழுதியுள்ளார்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் நன்மைகள்:

மேம்படுத்தப்பட்ட தோற்றம்: விபத்து, தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கடுமையான அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட நபர்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முக்கியப் பங்கு வகிக்கிறது. இது அவர்களுக்கு இயல்பான தோற்றத்தையும் செயல்பாட்டையும் மீட்டெடுத்து வாழ்வில் ஒரு புது அர்த்தத்தை உருவாக்குகிறது.

மறுசீரமைப்பு: பிளவுபட்ட உதடுகள், மேல் அண்ணக் குறைபாடுகள் மற்றும் பிற பிறவி முரண்பாடுகள் போன்ற உடல் குறைபாடுகளை சரி செய்வதில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பெருமளவில் உதவுகிறது. இதனால் அவர்களுடைய பேச்சு, உணவு மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் கைவிரல்களை மீண்டும் பழையபடி மீட்டெடுப்பதில் இந்த சிகிச்சை பெருமளவில் உதவி செய்கிறது. இதனால் அவர்களால் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என்பது வரப்பிரசாதமே.

இளமைத் தோற்றம்: திரைப்பட நடிகர்களும் மாடல்களும் மற்றும் தனிநபர்களும் தங்களது உடல், முகத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது. கண் இமை அறுவை சிகிச்சை போட்டோக்ஸ் ஊசி போன்ற நடைமுறைகள் வயதான அறிகுறிகளை குறைக்கும். இவர்கள் அதிக இளமையாகவும் துடிப்பாகவும் உணர உதவுகிறது. மற்றவர் பார்வைக்கும் மிக அழகாக தோற்றமளிப்பார்கள். வடுக்களை பழுது பார்த்தல், சருமத்தில் உண்டாகும் சில பிரச்னைகளை சரிசெய்கிறது.

எடை மேலாண்மை: அளவுக்கு அதிகமாக  உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சை கை கொடுக்கிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் சருமத்தை அகற்றி உடல் வடிவத்தை மாற்றுகிறது. லிப்போ சக்ஷன் அல்லது டம்மி டக்ஸ் போன்ற நடைமுறைகள் மூலம் ஒருவரது உடல் எடையை நன்றாக குறைக்க முடியும். உடல் வடிவத்தை மாற்றி அமைக்க முடியும்.

மேம்படுத்தப்பட்ட தோரணை: சிலருக்கு மார்பகக் குறைப்பு அல்லது அடி வயிற்று சதைக் குறைப்பு போன்றவை இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் சாத்தியமாகிறது. இது உடல் அசௌகரியத்தை தணித்து உடலில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் உடல் தோரணையை மேம்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
டீன் ஏஜில் ஏற்படும் மனநிலை மாற்றமும் அணுகுமுறையும்!
plastic surgery

புற்று நோய்க்கு புனரமைப்பு: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு மார்பக மறு சீரமைப்பு போன்ற அறுவை சிகிச்சைகள் செய்து, நோயாளிகள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க உதவுகிறது. அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறது.

பாலின மறுசீரமைப்பு: திருநங்கைகளுக்கு அவர்களின் பாலின அடையாளத்துடன் அவர்களின் உடல் தோற்றத்தை சீரமைப்பதில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர்களின் உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வை பெரிதும் மேம்படுத்துகிறது.

உளவியல் நன்மைகள்: ஒருவரது உடல் தோற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் அவருக்கு உளவியல் ரீதியாக பல நன்மைகள் உண்டாகும். தனது உடல் தோற்றத்துடன் தொடர்புடைய கவலை மற்றும் மனச்சோர்வின் உணர்வுகள் குறையும். இதனால் அவரது மன ஆரோக்கியம் அதிகரித்து மகிழ்ச்சி கூடும். மேம்பட்ட தோற்றம் சிறந்த சமூகத் தொடர்புகள் மற்றும் தொழில் முறை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com