சன் ஸ்கிரீன் உபயோகிக்கும் முன் இதெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்!

Know this before using sunscreen
Know this before using sunscreenhttps://www.herzindagi.com
Published on

வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் காலகட்டம் இது. பலரும் தங்கள் சருமத்தை சூரிய ஒளியின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துவார்கள். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சன்ஸ்கிரீனில் இரண்டு வகை உண்டு. இரசாயன சன்ஸ்கிரீன் மற்றும் மினரல் சன்ஸ்கிரீன். இவை இரண்டுமே நமது சருமத்தைப் பாதுகாக்கும் என்றாலும் அவற்றின் குணங்களில் சில வித்தியாசங்கள் உண்டு.

மினரல் (கனிம) சன்ஸ்கிரீன்: இது பிசிகல் சன்ஸ்கிரீன் என்றும் அழைக்கப்படுகிறது. துத்தநாக ஆக்ஸைடு அல்லது டைட்டானியம் டை ஆக்சைடு போன்ற கனிமப் பொருள்களைக் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. புற ஊதா கதிர்கள் நமது சருமத்தில் பட்டு பிரதிபலிக்கும்போது அதனுடைய தாக்கத்திலிருந்து காக்கும் ஒரு பாதுகாப்பு செயலியாக இது செயல்படுகிறது. இது யுவிஏ கதிர்களுக்கு எதிராக பரந்த ஸ்பெக்ட்ரம் பாதுகாப்பை வழங்குகிறது. ரசாயன சன்ஸ்கிரீன்களுடன் ஒப்பிடும்போது இது மென்மையானது மற்றும் சென்சிட்டிவ்வான சருமத்துக்கு மிகவும் ஏற்றது. இதை சருமத்தில் பூசிய உடனேயே வேலை செய்யத் தொடங்குகிறது.

ரசாயன சன்ஸ்கிரீன்: கார்பன் அடிப்படையிலான சேர்மங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த க்ரீமை சருமத்தில் பூசிய சிறிது நேரம் கழித்து வெளியே செல்லும்போது அது புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சி வெப்பமாக மாற்றுகிறது. யு.வி. கதிர்களை எதிர்க்கப் போராடுகிறது. இது சருமத்தில் ஊடுருவி புற ஊதா கதிர் வீச்சை உறிஞ்சி சேதம் விளைவிப்பதன் மூலம்தான் செயல்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் சில ரசாயனப் பொருட்களால் சிலருக்கு சரும எரிச்சல் அல்லது ஒவ்வாமை போன்ற எதிர்வினைகளை உண்டாக்கலாம்.

கெமிக்கல் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் போது சிலர் செய்யும் தவறுகள்:

1. வெளியில் செல்வதற்கு 15லிருந்து 30 நிமிடங்களுக்கு முன்பு இந்த கிரீமை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் இது முழுமையாக சருமத்தில் உறிஞ்சப்பட்டு வேலை செய்யும்.

2. காலையில் கெமிக்கல் சன்ஸ்கிரீனை அப்ளை செய்து விட்டு மாலை வீடு திரும்பி அதன் பின்னர்தான் பெரும்பாலானோர் முகம் கை கால்கள் கழுவுவார்கள். ஆனால், இது முற்றிலும் தவறு. கெமிக்கல் சன்ஸ்கிரீன் உபயோகித்த மூன்று மணி நேரத்தில் அதனுடைய செயல் தன்மையை இழந்து விடும்.

3. அதனால் மூன்று மணி நேரம் கழித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளை சோப்பு போட்டு கழுவுவதுதான் சிறந்தது. சன்ஸ்கிரீனை அப்ளை செய்து கொண்டு நாள் முழுக்க வெயிலில் அலைந்து திரிந்தால், அது எதிர் வினைகளை உண்டாக்கி முகத்தில் எரிச்சல் வீக்கம், அலர்ஜி போன்ற பிரச்னைகளை உருவாக்கும். எனவே, இதை மனதில் வைத்துக் கொண்டுதான் ரசாயன சன்ஸ்கிரீனை உபயோகம் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கண்ணாடி பாலத்தில் நடக்கும் த்ரில் அனுபவம் வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லலாமே!
Know this before using sunscreen

பிசிகல் சன்ஸ்கிரீன்கள் ரசாயன சன்ஸ்கிரீன்களை விட விலை உயர்ந்தவை. இவற்றை விளையாட்டு வீரர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். புற ஊதா கதிர்களை உறிஞ்சிக் கொள்ளாமல் சருமத்தில் பிரதிபலித்து அதை சிதறடிக்கின்றன. ஆனால், ரசாயன சன்ஸ்கிரீன்கள் புற ஊதாக் கதிர்களை சருமத்தில் உறிஞ்சி வெப்பமாக மாற்றிய பின்புதான் வேலை செய்கிறது. இதனால் இதன் தன்மை மாறுபடுகிறது.

மிகவும் மென்மையான சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், வெயிலில் அதிக நேரம் வேலை செய்வோர் பிசிகல் சன்ஸ்கிரீன்களை உபயோகப்படுத்தலாம். அது நீண்ட நேரம் நீடித்து இருப்பதுடன் அதனுடைய நீர் எதிர்ப்பு பண்புகளால் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com