
கொடிக்கள்ளி பல வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இந்த செடியை நாம் வீட்டில் வளர்ப்பதால் நமக்கு கிடைக்கும் மருத்துவ பயன்கள் என்ன? இதை வைத்து நம் வீட்டில் இருக்கும் பில்லி, சூன்யம், ஏவலை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.
இந்த தாவரம் கள்ளி வகையை சார்ந்தது. இலைகளே இல்லாமல் தண்டு மட்டும் முழுவதுமாக பரவியிருக்கக்கூடியது. எலி கள்ளி, திரு கள்ளி, எலி பாலை போன்ற பல்வேறு சிறப்பு பெயர்களும் உண்டு. இந்த செடியை வீட்டில் வளர்த்தால், தன்னை சுற்றியுள்ள மாசுப்படிந்த காற்றை சுத்தம் செய்கிறது. இதை பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த செடியில் உள்ள மருத்துவ பயன்கள் என்னவென்றால், சரும பிரச்னை, முடக்குவாதம், வயிற்று செரிமான பிரச்னை ஆகியவற்றை சரிசெய்யும். ஆறாத புண்களை குணப்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டது. சருமத்தில் ஏற்படக்கூடிய சொரி, படர்தாமரை போன்றவற்றை குணமாக்கும். இந்த செடிக்கு உஷ்ணத்தை குறைக்கும் தன்மையுண்டு.
கொடிக்கள்ளியை துண்டு துண்டாக வெட்டி அதை தண்ணீர் போட்டு கொதிக்கவிட்டு தண்ணீர் ஆறியதும் அந்த தண்ணீரில் குளித்துவர உடல் உஷ்ணம் நீங்கும். வாதப்பிரச்னையால் அவதிப்படுபவர்கள் வேப்ப எண்ணெய்யில் கொடிக்கள்ளியை வதக்கி அந்த எண்ணெய்யை தடவி வர முடக்கு வாதம், பக்கவாதம், முகவாதம் ஆகியவை குணமாகும்.
எலி, வண்டு, விஷப்பூச்சிக்கள் கடித்த இடத்தில் இந்த கொடிக்கள்ளியின் பாலை தடவினால் விஷமுறிவு ஏற்படும்.
கொடிக்கள்ளியை வீட்டில் வளர்ப்பதால் அந்த வீட்டில் உள்ள கண் திருஷ்டி, பில்லி, சூன்யம் அகலும். மேலும் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய திருஷ்டியை நீக்க கொடிக்கள்ளியை பயன்படுத்துவார்கள்.
மன அழுத்தம், பிரஷர், டென்ஷன் போன்றவை எப்போதும் இருப்பதுப் போல உணர்ந்தல் இந்த கொடிக்கள்ளி செடியை உடைத்து தலையணைக்கு கீழ் வைத்து படுத்தால் அது சரியாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)