இரத்த சோகை பிரச்னைக்கு நிவாரணம் தரும் கொத்தவரங்காய்!

கொத்தவரங்காய்
கொத்தவரங்காய்
Published on

விலை மதிப்பில் மலிவாகவும், உடல் ஆரோக்கியம் காப்பதில் வலுவாகவும் திகழ்வது கொத்தவரங்காய். இது நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்து விளங்குகிறது. மேலும், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பெருக்குவதோடு, இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது. இரத்த சோகை நோய்க்கு கைக்கண்ட மருந்தாக விளங்கும் இது, மலச்சிக்கல் பிரச்னையைம் அண்ட விடாது காக்கிறது.

பல்வேறு வகையான மண் வகைகளில் வளரும் தன்மையுடையது இது. மிதமான சூரிய ஒளியும், அதேசமயம் மண்ணில் ஈரப்பதமான காலநிலையும் இதன் வளர்ச்சிக்கு அவசியம். வடமேற்கு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கூடுதலாகப் பயிரிடப்படு இது, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனினும் நம் கிராமங்களிலும் இதன் விளைச்சலைக் காணலாம்.

நாம் சாப்பிடும் உணவில் சமச்சீர் சத்துக்கள் அவசியம் எனினும் உடலில் சேரும் தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் நார்ச்சத்து இருப்பது மிகவும் அவசியமாகிறது. இந்த நார்ச்சத்து கொத்தவரங்காயில் அதிகம் உள்ளது. கூடவே இதிலுள்ள பொட்டாசியம் சத்து இதயத்திற்கு நல்ல பலத்தைத் தருகிறது.

தற்போது பெருகிவரும் உடல் பருமன் பிரச்னைக்கு  கொத்தவரங்காய் நிவாரணம் தருகிறது. ஆம், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் கொத்தவரங்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரணம் இதில் கலோரி அளவு மிகவும் குறைவாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்களை அதிகமாகக் கொண்டிருக்கும் உணவாக இது உள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழர் கட்டடக்கலை சிறப்பைக் கூறும் தூங்கானை மாடக் கோயில்!
கொத்தவரங்காய்

உடல் ஆரோக்கியம் சிறக்க உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாடு இருந்தால் இரத்தச் சோகை நோய் ஏற்படுகிறது. இந்த இரத்தச் சோகையைத் தடுக்க கொத்தவரங்காயை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் இரத்த சோகை நோயை நீங்கி உடல் ஆரோக்கியமான நிலையைப் பெறுகிறது.

மேலும், பல வகையான நோய் கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காக்கத் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை கொத்தவரங்காயை உணவில் எடுப்பதன் மூலம் பெற்று உடலைப் பாதுகாக்கலாம். கொத்தவரங்காய் சருமப் பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதிப்படைந்த  திசுக்களை சருமத்திலிருந்து நீக்குவதோடு முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவற்றிலிருந்து காக்கிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை கூர்மையாக்குகிறது. ஆஸ்துமா பிரச்னையைக் குணமாக்கும் ஆற்றல், நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி மற்றும் வலி நிவாரணியாகவும் இது செயல்படும் தன்மை கொண்டது.

இத்தனை பயன்கள் இதில் இருந்தாலும் வாதம், பித்தம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் பிரச்னைகளை மேலும் அதிகப்படுத்தும்  என்பதால் இதைத் தவிர்ப்பது நல்லது. கொத்தவரங்காய்க்கு எப்பொழுதும் நோய் தீர்க்கும் தன்மையானது குறைவு. வேறு பாதிப்புகளுக்கு உணவுப் பத்தியம் இருப்பவர்கள் கொத்தவரங்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் எடுத்துக்கொண்ட மருந்து திறனற்று விடும் என்கிறது மருத்துவம். ஆனால், அவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் மருத்துவ குணங்கள் அடங்கிய கொத்தவரங்காயை  வாரம் மூன்று முறையாவது நம் உணவில் பயன்படுத்தி நலம் காண்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com