கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. அனல் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்கி நல்ல நீர் ஏற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.
அதற்கு இளநீர், எலுமிச்சை ஜூஸ் இரண்டுமே கோடை காலத்தில் நமக்கு அமிர்தம் போலத்தான் தோன்றும்.
இந்த இரண்டுமே நீர்ச்சத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை.
ஆனால் இதில் எதை அதிகமாகக் குடிக்கலாம்? எது அதிக நீர்ச்சத்தை உடலுக்கு தருகிறது? பார்ப்போம்....
இளநீர் நன்மைகள்:
இளநீரில் கிட்டத்தட்ட 94 சதவீதத்துக்கு மேல் நீர்ச்சத்தும் மிக மிகக் குறைவான அளவில் கொழுப்பு சத்தும் இருக்கிறது.
ஆன்ட்டி ஆக்சிடெண்ட்களும் நிறைந்துள்ளது.
இந்த ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் உடலில் உள்ள ப்ரீ-ரேடிக்கல் ஸ்களை எதிர்த்துப் போரிட்டு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதில் பொட்டாசியம் மெக்னீசியம் உள்ளிட்ட ஆற்றல் வாய்ந்த மினரல்களும் உள்ளன.
இவை இன்சுலின் சென்சிட்டிவிட்டியை தூண்டி ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
குறிப்பாக டைப் 2 நீரிழிவு மற்றும் ப்ரீ- டயாபடிஸ் உள்ளவர்கள் எடுக்கலாம். இதில் கால்சியம் , சோடியம் உள்ளிட்ட எலக்ட்ரோ லைட்டுகளும் உள்ள இளநீரை வெயில் காலத்தில் குடிக்கும் போது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.
எலுமிச்சை ஜூஸ் நன்மைகள்:
நம்முடைய உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தை கொடுக்க இந்த லெமன் ஜூஸ் உதவுகிறது. மற்ற சர்க்கரை சேர்த்த பானங்களை தவிர்ப்பதற்கு மிகச் சிறந்த மாற்றாக லெமன் ஜூஸை குடிக்கலாம்.
இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தடுத்து , அதோடு ஜீரண ஆற்றலையும் மேம்படுத்தும் அற்புத பானம் .
எலுமிச்சை சாறு நீரிழிவை கட்டுப்படுத்துவதில் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கவும் ,உதவி செய்கிறது. உடலின் நீர் சத்தை அதிகரிக்க செய்ய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் தண்ணீராக குடிப்பதற்கு பதிலாக எலுமிச்சை சாறு கலந்த பானமாககுடிக்கலாம். இது நீர்ச்சத்தையும்அதிகரிக்கும். ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைய உள்ளன.
எலுமிச்சை ஜூஸ் கல்லீரல் செயல்பாட்டை அதிகரித்து உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. வளர்ச்சிதைமாற்றம் அதிகரித்து உடல் எடை பராமரிப்புக்கும் பெரிதளவில் உதவுகிறது.
பித்தம் , அமிலங்களின் உற்பத்தியை அதிகரித்து சீரான செரிமானத்தை எளிதாக்கும். இதனால் அஜீரணம் வீக்கம் நெஞ்செரிச்சல் போன்றவை தடுக்கப்படும். நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
இதில் இயற்கையான அமிலத்தன்மை இருப்பதால் உடலின் பிஹெச் அளவை சமப்படுத்தி, வீக்கத்தை எதிர்த்து போராடவும் செய்யும்.
இளநீர், எலுமிச்சை ஜூஸ் இரண்டுமே குடிப்பது நம் உடலுக்கு நல்லது. இரண்டிலும் ஏறக்குறைய சமமான அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த இரண்டிலும் மிகச் சிறிய அளவிலையே ஊட்டச்சத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் நீர்ச்சத்துடன், நீர் ஏற்றத்துடன் உடலை வைத்துக் கொள்வதற்கு இந்த இரண்டு பானங்களையும் குடிக்கலாம்.
உடலின் நிலைகளை பொறுத்து இந்த இரண்டு பானங்களை ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக
இளநீரில் சர்க்கரை இருக்கிறது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இளநீரை தவிர்த்து விட்டு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள், சிறுநீர் எரிச்சல், அல்சர், வயிற்றுவலி உள்ளிட்டவர்கள் இளநீரை அதிகமாக எடுத்துக்கொண்டால் கூடுதல் எனர்ஜி கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலின் நச்சுத்தன்மையை நீக்கி புத்துணர்ச்சி பெற விரும்பினால் பானம் குடிக்க விரும்பினால் எலுமிச்சை சாறு சிறந்தது .
உடலின் நீரேற்றத்திற்கு உதவி செய்யவும், உடல் செல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. உடலுக்கு இயற்கையான ஆற்றலைப் பெற விரும்பினால், இளநீரை தேர்வு செய்யலாம்.
எது சிறந்தது?
எனவே கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள இளநீர், எலுமிச்சை ஜுஸ் ஆகிய இரண்டுமே உதவி புரிவதால் அவற்றை தேர்வு செய்வது என்பது ஒருவரது விருப்பத்தை பொறுத்தது.
உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட பின் அல்லது வெளியே சுற்றிய பின் குடிக்க இளநீர் சிறந்ததாக இருக்கும்.
அதே வேளையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள நினைத்தால் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது சிறந்ததாக இருக்கும்.