சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு!

Happy family
Happy family
Published on

சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையை இனிமையாக்குகின்றன. மனதை மகிழ்ச்சியாக்குகின்றன. மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக நாம் அவசியம் செய்ய வேண்டிய சிலவற்றைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

1. ஒண்ணா சேர்ந்து விளையாடுங்க: காலை நேரத்தில் வீட்டில் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து யோகா, உடற்பயிற்சி ஏதாச்சும் பண்ணுங்க. முடிஞ்சா ஒண்ணா ஏதாச்சும் விளையாடுங்க. உடம்பு, மனசு ரெண்டையும் லேசாக்கி குடும்ப பந்தத்தை இன்னும் இறுக வைக்கும் இது!

2. கொஞ்ச நேரம் ஜாலியா பேசுங்க: தினசரி நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் உங்க குடும்ப உறுப்பினர்களோடு பகிர்ந்துக்குங்க. ஸ்கூல், ஆஃபீஸ், அக்கம் பக்கத்துல நடந்ததை பகிர்ந்துக்கங்க. இப்படி நடப்பு விஷயங்களை அசை போடுறதால குடும்ப உறுப்பினர்களுக்குள் உங்களை அறியாம ஒரு நெருக்கமும் பிரச்னைகளுக்குத் தீர்வும் கிடைக்கும்.

3. தினமும் ஒரு வேளையாவது ஒண்ணா சேர்ந்து சாப்பிடுங்க: அது டின்னரா இருந்தா பெட்டர். சாவகாசமா உட்கார்ந்து ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்து, வம்பு பேசி சாப்பிடும்போது, உங்களுக்குள் ஒரு நல்ல உறவு சீராக ஆகும். அன்றைய நாளின் டென்ஷன் அத்தோடு போக இது கைகொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
வெள்ளை துணிகளில் உள்ள கறைகளைப் போக்க சில எளிய வழிகள்!
Happy family

4. எதிர்மறையா பார்க்காம நேர்மறையா பாருங்க: ஒரு நபரோட எதிர்மறை இயல்பைத்தான் முதல்ல நாம பார்ப்போம். அதை விட்டு, அவரது நேர்மறை சிந்தனையை பார்க்கக் கத்துக்கோங்க. சின்னச் சின்ன நல்ல விஷயங்களை பாராட்டக் கத்துக்குங்க. இந்த ஒரு நல்ல விஷயமே உங்க உறவை உன்னதமா வச்சிருக்கும்.

5. உங்க வீட்டு பப்பி, ஜிம்மிய கொஞ்சுங்க: மைன்டை ரிலாக்ஸ் பண்ணிக்க அழகா ஒரு செடியோ, குட்டி நாயோ வளர்க்கலாம். தோட்டம், செல்லப் பிராணி வளர்க்கிறது. உங்களோட மன இறுக்கத்தை வெகுவாகக் குறைக்கும்.

6. என்னங்க... சாப்பிட்டீங்களா?: நீங்க வீட்ல இருப்பீங்க. உங்க துணைவர் ஆஃபீஸ்ல இருக்கலாம். ஒரு கால் பண்ணி, அவங்க சாப்பிடாங்களான்னு கேளுங்க. "சாரிப்பா... காரக்குழப்பை சொதப்பிட்டேன். வாய்ல வச்சதும் உங்க நினைப்புதான் வந்தது" இப்படி பேசிப் பாருங்க. படு சுமாரா இருக்குற உங்க சாப்பாட்டைக் கூட அட்ஜஸ்ட் பண்ற குணம் அவங்களை அறியாம வரும்.

7. வாய்விட்டுப் பாராட்டுங்க: "இன்னிக்கு நீ ஃப்ரெஷ்ஷா இருக்குறே... இந்த டிரெஸ் உனக்கு சூட்டா இருக்குப்பா"ன்னு உங்க துணைகிட்டே நல்ல விஷயங்களை உடனே வாய் விட்டுச் சொல்லுங்க. அந்த கமென்ட் உண்மையானதா இருக்கணும். சும்மா ஏதோ பிட்டு உடுறான்னு உங்க ஆளு நினைக்கிற அளவுக்கு உங்க கமென்ட் இருக்க வேண்டாம்.

8. வாரக் கடைசியிலே மனசையும், உடம்பையும் ரிலாக்ஸ் பண்ணுங்க: மனசையும். உடம்பையும் ரிலாக்ஸ் பண்ண வாரக் கடைசியிலே ஒரு 'நல்ல மூவி' பார்க்கலாம். ஒரு ரெஸ்டாரெண்ட் போகலாம். ஒரு புக் படிக்கலாம், ஆயில் பாத் எடுக்கலாம். புத்திசாலிகள் ஒருபோதும் 'நான் ரிலாக்ஸ் பண்ணப் போறேன்’னு சொல்லிட்டு, சுற்றியிருப்பவர்களை டார்ச்சர் பண்ணுவதில்லை.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்களே, குழந்தைகள் குறித்த புலம்பலை முதலில் நிறுத்துங்கள்!
Happy family

9. உடையலங்காரம் உற்சாகம் தரும்: உங்க உடைகளில் ரொம்பவும் கவனம் செலுத்துங்க. உடையலங்காரம் உங்களை ரொம்பவே மலர்ச்சியா இருக்க வைக்கும். அழகா, நீட்டா உடுத்தும்போது அது தன்னம்பிக்கையைக் கொடுக்கும். உற்சாகம் பிறக்கும். உங்களை சுற்றியிருப்பவர்களுக்கும் அந்த உற்சாகம் தானா தொத்திக்கும்.

10. மத்தவங்களை சந்தோஷப்படுத்துங்க: 'சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கிறதுதான். உங்களைச் சுற்றி இருக்குற நபர்களை சின்னச் சின்ன விஷயங்களில் சந்தோஷப்படுத்திப் பாருங்க. உங்க வாழ்க்கை அர்த்தமுள்ளதா உங்களுக்கே தெரிய ஆரம்பிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com