ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் உதட்டின் நிறம்! 

Lips
Lips
Published on

உதடுகள் நம் அழகை வெளிப்படுத்தும் ஒரு அங்கமாக மட்டுமின்றி, உடலின் உள் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி போன்றவையாகவும் செயல்படுகின்றன. உதட்டின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் பல உடல்நிலைப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் உதட்டின் நிறத்தை வைத்து நோயைக் கண்டறிதல் பழங்காலங்களில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. 

உதட்டின் நிறம் ஏன் மாறுகிறது? 

உதட்டின் நிறம் மாறுவது என்பது பல காரணங்களால் ஏற்படும். இதற்கு உணவுப் பழக்கவழக்கங்கள், நீர் பற்றாக்குறை, வயது, மருந்துகள், புகைப்பிடித்தல், மன அழுத்தம் மற்றும் சில நோய்கள் ஆகியவை காரணமாகலாம்.‌ உதாரணமாக ரத்தசோகை உள்ளவர்களுக்கு உதடுகள் வெளுத்து காணப்படும். நுரையீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு உதடுகள் நீல நிறத்தில் மாறும் வாய்ப்புள்ளது. 

  • இளஞ்சிவப்பு நிற உதடுகள்: பொதுவாக இது நல்ல ஆரோக்கியமான உடலுக்கான அறிகுறியாகும். இது போதுமான ஈரப்பதம், ஆரோகத்தைக் குறிக்கிறது. 

  • வெளுத்த உதடுகள்: ரத்த சோகை, நீர் பற்றாக்குறை, குறைவான வைட்டமின் பி12 அளவு போன்ற பிரச்சனைகளை இது குறிக்கிறது. 

  • நீல நிற உதடுகள்: உங்களுக்கு இதய நோய், ரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாடு, நுரையீரல் பிரச்சனை இருந்தால் உதடுகள் நீல நிறத்தில் மாறும் வாய்ப்புள்ளது.

  • ஊதா நிற உதடுகள்: கல்லீரல் பிரச்சனை அல்லது நரம்பு மண்டல கோளாறுகள் இருப்பவர்களுக்கு ஊதா நிற உதடுகள் ஏற்படும். 

  • பழுப்பு நிற உதடுகள்: சர்க்கரை நோய் அல்லது அடிக்கடி உடல் நோய்வாய்ப்படுதல் போன்றவற்றால் உதடு பழுப்பு நிறத்திற்கு மாறும். 

இதையும் படியுங்கள்:
வெற்றி பெற்ற தொழிலதிபர்களின் 9 தினசரி பழக்க வழக்கங்கள் பற்றித் தெரியுமா?
Lips

உதட்டின் நிறத்தை சீராக வைத்துக்கொள்வது எப்படி? 

தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து உதட்டின் நிறம் எப்போதும் சீராக இருக்கும். இத்துடன் ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, உதட்டின் நிறத்தில் மாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். 

தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புகைப்பிடித்தல், உதட்டின் நிறத்தை முற்றிலுமாக மாற்றி பற்களையும் கருப்பாக மாற்றும். எனவே, இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது நல்லது. உங்களது உதட்டில் நிறமாற்றம் அடிக்கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. 

உதட்டின் நிறம் நம் உடல் நிலையைப் பற்றி அதிகம் சொல்லும் என்றாலும், உதட்டின் நிறம் மட்டுமே நோயைக் கண்டறிவதற்கான ஒரே அளவுகோல் அல்ல. உதட்டின் நிறம் மாறினால் ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனை அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும் மூலம் உதட்டு நிறத்தை இயற்கையாகவே மேம்படுத்தலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com