

கல்லீரல் நம் உடல் நச்சுக்களை நீக்கி மெட்டபாலிசத்தை ஊக்குவித்து ஹார்மோன்களை சமச்சீராக வைக்கிறது. அதில் குறைபாடு ஏற்படும் போது அதை நம் கைகள் மூலம் அறிய முடியும். கைசிவத்தல், நகங்களில் மாறுபாடுகள், அரிப்பு மற்றும் நடுக்கம் போன்ற பிரச்னைகள் கைகளில் ஏற்பட்டால் அது கல்லீரலில் பிரச்னையைக் குறிக்கிறது.
பல்மார் எரிதிமா (Palmar Erythema) :
உள்ளங்கை சிவத்தலை பல்மார் எரிதிமா என்று கூறப்படுகிறது. குறிப்பாக கட்டைவிரலிலும் மற்றும் சுண்டு விரலிலும் சிவத்தல் இருக்கும். இது ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகி இருப்பத்தை உணர்த்துகிறது. இப்படி ஏற்பட்டால் மருத்துவ செக் செய்வது அவசியம். கல்லீரலில் பிரச்னை இருந்தால் இப்படி ஆகலாம்.
Dupuytrens Contracture :
உள்ளங்கையில் தோல்கள் தடித்து, இதனால் கை விரல்கள் வளைந்து காணப்படும். இதை Dupuytrens Contracture என்பர். கல்லீரலில் சிர்ரோசிஸ் உண்டாவதால் இப்படி ஒரு நிலைமை கைகளுக்கு ஏற்படுவதாக தெரிகிறது.
Terrys nails (டெட்ரிஸ் நகம்) :
நகங்களின் நுனியில் வெள்ளையாக காணப்படும். மேலும் அதன் கீழ் ரோஸ் நிறத்தில் இருக்கும். இது கல்லீரலில் சிர்ரோசிஸ் பாதிப்பை உணர்த்தும் அறிகுறியாகும். இந்த மாதிரி நகநிலை, இதய பாதிப்பு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்படும்.
நகம் சேர்ந்து கொள்வது (Nail clubbing) :
நம் கல்லீரல் பாதிப்படைந்தால் நகத்தில் கொக்கி போன்ற அமைப்பு ஏற்படும். இந்த மாதிரி மாறுதல் ஏற்படும் போது மருத்துவ பரிசோதனை தேவை.
ஆஸ்டெரிக்சிஸ் (Asterixis) :
கை தசைகளின் பாதிப்பால் கையில் நடுக்கம் ஏற்படும். பொதுவாக ஹெபாடிக் என்சேஃபாலோபதி (hepatic encephalopathy) என்ற கல்லீரல் நோயால் இப்படி ஏற்படும்.
உள்ளங்கை அரிப்பு :
உள்ளங்கையில் அரிப்பு மற்றும் பொரிபொரியாக ஏற்பட்டால் கொலஸ்டாசிஸ் என்ற கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியாகும். மேலும் கல்லீரல் சிர்ரோசிஸாலும் இப்படி அரிப்பு ஏற்படும்.
மேலும் சில அறிகுறிகள் :
கண்கள் மஞ்சளாகி மஞ்சள் காமாலை ஏற்படுவது.
சோர்வு, பலவீனம் மற்றும் மெடபாலிசம் குறைதல்.
வயிற்றில் நீர் அதிகமாவது.
உங்கள் கைகளில் உள்ள பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)