விதி வலியது தான்... ஆனா அதை விட வலியது உங்க டயட்! ஆயுளை நீட்டிக்க சயின்ஸ் சொல்லும் ரகசியம்!

Long Life Tips
Long Life Tips
Published on

"எங்க தாத்தாவுக்கு சுகர் இருந்துச்சு, அதான் எனக்கும் வந்துச்சு", "எங்க பரம்பரைக்கே சீக்கிரம் சொட்டை விழுந்துடும்" - இப்படிப் பலரும் தங்கள் உடல்நலப் பிரச்சனைகளுக்குப் பரம்பரையை அல்லது மரபணுவை குறை சொல்வதைக் கேட்டிருப்போம். எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

ஆனால், அந்த விதியையே மாற்றியமைக்க முடியும் என்கிறது சமீபத்திய அறிவியல் ஆய்வு. நம் ஆயுட்காலம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அது எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம் வாங்க.

சீனா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு பிரம்மாண்டமான ஆய்வை மேற்கொண்டனர். அதில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் தரவுகளை எடுத்து ஆய்வு செய்தனர். இவர்களின் நோக்கம் ஒன்றுதான்: ஒரு மனிதனின் ஆயுளைத் தீர்மானிப்பது அவனது மரபணுவா? அல்லது அவன் வாழும் வாழ்க்கை முறையா?

ஆய்வின் முடிவில் ஒரு அதிர்ச்சிகரமான, அதே சமயம் மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. அதாவது, ஒருவருக்குக் குறைவான ஆயுட்காலம் கொண்ட மோசமான மரபணுக்கள் இருந்தாலும், அவர் சரியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால், அகால மரணத்தைத் தவிர்க்க முடியும் என்பதுதான் அந்தச் செய்தி.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்றால் என்ன? 

இந்த ஆய்வின்படி, மரபணு ரீதியாகப் பாதிப்பு உள்ளவர்கள் கூட, கீழ்க்கண்ட விஷயங்களைக் கடைப்பிடித்தால் 5 ஆண்டுகள் வரை தங்கள் ஆயுளை நீட்டிக்க முடியும்.

  • புகை மற்றும் மது பழக்கம் இல்லாமல் இருப்பது.

  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது.

  • சரியான நேரத்தில், சத்தான உணவை உட்கொள்வது.

  • இது மிக மிக முக்கியம். ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது அவசியம்.

இதையும் படியுங்கள்:
கோபம் வந்தா இனி சும்மா கத்தாதீங்க... இந்த 'சைலன்ட்' டெக்னிக் ஃபாலோ பண்ணுங்க!
Long Life Tips

டீப் ஸ்லீப்!

சும்மா படுத்துப் புரண்டு 8 மணி நேரம் ஓட்டுவது தூக்கம் அல்ல. ஆழ்ந்த உறக்கம் எப்போது கிடைக்கிறதோ, அப்போதுதான் உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. ஜிம்மில் வொர்க்அவுட் செய்து தசைகளை உடைத்தாலும், சரியான உணவு சாப்பிட்டாலும், அதை உடலில் சேர்ப்பது தூக்கம்தான். சரியான தூக்கம் இல்லையென்றால், நீங்கள் செய்யும் டயட்டும், உடற்பயிற்சியும் முழு பலனைத் தராது.

ஆய்வின் முடிவு!

ஆய்வு முடிவுகள் மிகத் தெளிவாக உள்ளன. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு அகால மரணம் ஏற்படும் வாய்ப்பு 78% குறைவாக உள்ளது. உங்களுடைய மரபணு உங்களை நோக்கி ஒரு துப்பாக்கியை நீட்டலாம், ஆனால் அந்தத் துப்பாக்கியின் விசையை அழுத்துவது உங்கள் வாழ்க்கை முறைதான். நீங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தால், அந்தத் துப்பாக்கி வெடிக்காது.

இதையும் படியுங்கள்:
புதிய சூழல்... புதிய சுவாசம்: ஏன் நாம் அடிக்கடி பயணிக்க வேண்டும்?
Long Life Tips

நாம் பிறக்கும்போது எந்த மரபணுவுடன் பிறக்கிறோம் என்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், எப்படி வாழ வேண்டும் என்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும். "எங்க பரம்பரைக்கே இது இருக்கு" என்று சோம்பேறித்தனமாகச் சாக்கு சொல்வதை நிறுத்திவிட்டு, இன்றே ஜிம்முக்குச் செல்லுங்கள், ஆரோக்கியமாகச் சாப்பிடுங்கள், மிக முக்கியமாக நிம்மதியாகத் தூங்குங்கள். 

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com