விழித்திரைக்கு பாதிப்பு தரும் செல்போன்!

விழித்திரைக்கு பாதிப்பு தரும் செல்போன்!

மது உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கண்கள். அது இல்லாவிட்டால் நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கூட விட்டுவைக்கவில்லை கண்களில் ஏற்படும் விழித்திரை பாதிப்பு. தொலைக்காட்சி பார்ப்பது, நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்துவது, செல்போன்களை அதிக நேரம் பார்த்துக்கொண்டிருப்பது ஆகியவையே இதற்கான முக்கியமான காரணங்களாகும். டிஜிட்டல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பது விழித்திரையை பாதிக்கும்.

இதனால் கண்களில் அழுத்தம் ஏற்படலாம். கண் எரிச்சல், கண்களில் அரிப்பு ஆகிய பிரச்னைகளும் வரலாம். இதுபோன்ற நேரங்களில் நாம் கண்களுக்கு ஒருசில பயிற்சி கொடுப்பதும், சரியான உணவுகளைச் சாப்பிடுவதும் இந்தப் பிரச்னையைக் குறைய வழிவகுக்கும். விழித்திரை பாதிக்கப்பட்டவர்கள் முதலில் விட வேண்டியது புகைப்பிடிக்கும்.

கண்கள் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்:

உங்களுக்கு நீரிழிவு நோய் அல்லது வேறு சில நோய்கள் இருந்தால் கண் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கண்களை புற ஊதாக்கதிர்கள் ஊடுருவாமல் தடுக்க வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணியுங்கள்.

நல்ல கண் பார்வைக்கு தினமும் 7 அல்லது 8 மணி நேர தூக்கம் அவசியம். இரவு நீண்ட நேரம் விழித்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கண் பார்வையை மேம்படுத்த கேரட், பப்பாளி, மீன் உணவுகளை அவ்வப்போது சாப்பிடுங்கள். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இது சூட்டை தணித்து கண் நரம்புகள் சிறப்பாகச் செயல்பட உதவும்.

கீரை, முட்டைக்கோஸ், புரோக்கோலி, பட்டாணி, வெண்ணெய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது கண் தசைகள் பராமரிப்புக்கு உதவும். இதேபோல, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி பழங்கள், எலுமிச்சை ஆகியவற்றை அடிக்கடி உட்கொள்ளலாம். இவற்றில் வைட்டமின் சி உள்ளது. பிஸ்தா, வால்நெட், பாதாம் போன்ற வைட்டம் ஈ நிறைந்த பருப்புகளையும் சாப்பிடலாம். இவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com