நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பலவகையான பழங்கள் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று உலகமயமாதலின் காரணமாக பல்வேறு நாடுகளின் பழங்கள் நம் நாட்டில் கிடைக்கின்றன. அப்படி கிடைக்கும் பழங்களில் ஒன்றுதான் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட லுகுமா (Lucuma) பழம். இனிப்பு சுவை கொண்ட இந்த பழம், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் நிறைந்துள்ள விட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நம் உடலுக்கு பல வகைகளில் பயன்படுகின்றன. இந்தப் பதிவில் லுகுமா பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
லுகுமா பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்:
யுகமா பழத்தில் குறைந்த கிளைசமின் குறியீடு உள்ளது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக உயரும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. இது ரத்த நாளங்களை சுத்திகரித்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
லுகுமா பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. இது வயிற்றுப்புண், அஜீரணம் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்தப் பழத்தில் இருக்கும் விட்டமின் சி, சருமத்தை பொலிவாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் சுருக்கங்களைக் குறைக்கும் பண்புகளும் இந்தப் பழத்திற்கு உண்டு.
இந்தப் பழத்தில் நிறைந்து காணப்படும் வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. எனவே, இந்த பழத்தை இயற்கையின் இனிப்பு மருத்துவம் என்றே அழைக்கலாம். இதில் வைட்டமின் சி, பீட்டா கரேட்டின் போன்ற மிக முக்கியமான வைட்டமின்கள் உள்ளன. குறிப்பாக, நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், எல்லா விதமான உடல் பிரச்சினைகளும் சரியாகும்.
லுகுமா பழத்தை நீங்கள் எங்காவது பார்த்தால், கட்டாயம் வாங்கி சாப்பிடுங்கள். இந்தப் பழத்தை நேரடியாகவோ அல்லது பவுடர் வடிவிலோ வாங்கி, பால், தயிர், சுமூத்தி போன்றவற்றுடன் கலந்து குடிக்கலாம். மேலும், இந்தப் பழத்தைக்கொண்டு கேக், பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தயாரித்து சாப்பிடலாம். லுகுமா பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், நாம் பல நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.