பசுமஞ்சளின் மகத்தான குணங்கள் - ஆரோக்கியம் முதல் ஊறுகாய் வரை!

Pasumanjal
Pasumanjal

பசு மஞ்சள் சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. இவற்றை வாங்கி ஊறுகாய் போடலாம். வட்ட வட்டமாக நறுக்கி வெயிலில் காயவைத்து நன்கு காய்ந்ததும் மிஷினில் அரைத்து வந்து சமையலுக்கு பயன்படுத்தலாம். கலப்படமற்ற சூப்பரான மஞ்சள் பொடி வருடம் முழுவதும் கிடைக்கும். இதற்கு மூன்று கிலோ நான்கு கிலோ என வாங்கி காயவைத்து பொடியாக்கி ஸ்டோர் செய்து கொள்ளலாம்.

  • ஆன்ட்டி செப்டிக் பண்புகளைக் கொண்ட பசுமஞ்சளில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், ஆன்ட்டி ஏஜிங் பொருட்கள் ஏராளமாக உள்ளது மேலும் இதில் குர்குமின் என்னும் பொருளும் உள்ளது. 

  • குடல் புண்களை ஆற்றி அல்சரை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இதனை உணவில் சேர்த்துக் கொள்ள புற்றுநோய் திசுக்களை வளர விடாமல் அழிக்கும் தன்மை உண்டு.

  • ஞாபகத் திறனை அதிகரிக்க உதவும். ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும் தன்மை பசுமஞ்சளுக்கு உண்டு. 

  • இன்ஃப்ளமேசன் எனப்படும் உள் காயத்தை குறைக்கும் தன்மை இதற்கு உண்டு.

பசுமஞ்சள் வைத்தியம்:

தோல் நீக்கிய பசுமஞ்சள் ஒரு துண்டுடன் மிளகு 6, துளசி இலை இரண்டு, சின்ன வெங்காயம் ஒன்று என இந்த நான்கையும் சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கி விட்டு சிறிதளவு நீர் குடிக்க ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு நீங்குவதுடன் உணவுக் குழாயை பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் செய்யும்.

ருசிக்காக மட்டுமில்லை உடலுக்கும் நன்மை தரும் பசுமஞ்சள் ஊறுகாய். பொங்கலை ஒட்டி பசு மஞ்சள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கும். அதனை வாங்கி ஊறுகாய் போட நான்கு மாதங்கள் ஆனாலும் கெடாது.

இதையும் படியுங்கள்:
குடலுக்கும் மூளைக்கும் உண்டான தொடர்பு... குடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவங்கள்! 
Pasumanjal

பசுமஞ்சள் ஊறுகாய்:

தேவையானவை:

பசுமஞ்சள் 1/4 கிலோ

உப்பு தேவையானது

காய்ந்த மிளகாய் 10

வெந்தயம் ஒரு ஸ்பூன்

நல்லெண்ணெய் 50 மில்லி

பெருங்காயம் அரை ஸ்பூன்

கருவேப்பிலை சிறிதளவு

எலுமிச்சம் பழம் 2

கடுகு 1 ஸ்பூன்

செய்முறை:

பசுமஞ்சளை நன்கு அலம்பி தோல் சீவி கேரட் துருவலில் துருவி எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், மிளகாய் வற்றல், பெருங்காய கட்டி ஆகியவற்றை போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும். ஆறியதும் அதனை மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு கடுகு பொரிந்ததும் தோல் நீக்கி துருவி வைத்த மஞ்சளைப் போட்டு தேவையான உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும். அதன்பின் அரைத்து வைத்த மசாலா பவுடரை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும். சிறிது ஆறியதும் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து கலந்து விடவும். சூடாக இருக்கும் போது எலுமிச்சம் பழச்சாறு விட கசந்து விடும். எனவே சிறிது ஆறியதும் எலுமிச்சம் பழச்சாறு விட்டு கலக்கவும். நன்றாக ஆறியவுடன் அதனை ஒரு ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விட நான்கு மாதங்கள் வரை கூட கெடாமல் இருக்கும். இதனை தயிர் சாதம், இட்லி, தோசை, பொங்கல் என தொட்டுக்கொள்ள சத்துடன் கூடிய ருசியான பசுமஞ்சள் ஊறுகாய் தயார். சூடான சாதத்தில் சிறிதளவு நெய் விட்டு இரண்டு ஸ்பூன் பசுமஞ்சள் ஊறுகாய் போட்டு பிசைந்து சாப்பிட அருமையான ருசியில் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com