

ஜோதிஷ்மதி என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். இதை மல்கங்கனி என்றும் கூறுவார்கள். இது மிகச் சிறந்தது. அழற்சியைப் போக்கக் கூடிய கொடிவகைச் செடியாகும். இது தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. அதுமட்டுமல்ல சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. எக்ஸிமா சரும நோயைப் போக்கக் கூடியது. இது மிகக்கடுமையான புண்ணையும் ஆற்றக்கூடியது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்பு அதிகமாக இருப்பதால் மூட்டுவலிப் பிரச்னைகளைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மூலிகை நினைவாற்றலை அதிகரிக்கக் கூடிய பண்பைப் பெற்றது. ஆயுர்வேதத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள மூலிகை. பூ, இலை, கொட்டை என அனைத்திலும் மருத்துவ நன்மைகள் நிறைந்த காயகல்ப மூலிகையாகும்.
ஜோதிஷ்மதி பொடி / மல்கங்கனி ஊட்டச்சத்துகள்:
கார்போஹைட்ரேட்ஸ், ஸ்டெரால்ஸ் மற்றும் பாலிஹைட்ரிக் அமிலங்கள் நிறைந்தது.
ஒற்றை நிறைவுறா கொழுப்பு, பல்நிறைவுறாக் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டது.
'சி' சத்து நிறைந்தது
சோடியம், கால்சியம் , பொடாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்தது.
ஜோதிஷ்மதி பொடி / மல்கங்கனி ஆரோக்கிய நன்மைகள்:
இது நினைவாற்றல் மூளை மேம்பாடு ஆகியவற்றை அதிகரிக்கக் கூடியது. ஞாபக சக்தி அதிகரிக்கக்கூடியது. இதன் விதை எண்ணையில் செய்க்விடர்பீன் என்ற ஆல்கலாய்டில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் மூளை மேம்பாட்டை அதிகரிக்கச் செய்யும். மூளை நரம்புகளை ஆக்சிடேடிவ் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும்.
இது சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கக் கூடியது. மூளையை அமைதியாக்குகிறது. சோர்வை ஏற்படுத்தக்கூடிய கார்டிசால் அளவைக் குறைத்து மனதை அமைதிப்படுத்தும். நரம்புகளை ஆரோக்கியமாக வைத்து அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
மூளை திசுக்களையும் நரம்புகளையும் தன் ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்த பண்புகள் மூலம் ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் குறைத்து அமைதியாக்கும். மூளை மேம்பாட்டிற்கான சூப்பர் ஆக்சைடை அதிகரிக்கச் செய்யும். இதன்மூலம் ஞாபகமறதி நோயான அல்சீமர் நோய் தவிர்க்கப்படும்.
மூட்டுகளில் ஏற்படும் அழற்சி மற்றும் வலிகளை போக்க கூடிய அழற்சி எதிர்ப்பு பண்பைப் பெற்றது. இதன் கொட்டையின் எண்ணை மூட்டுகளில் ஊடுருவி வலியைக் குறைக்கும். விறைப்புத் தன்மையைக் குறைக்கும். அதுமட்டுமல்லாமல் வீக்கத்தையும் குறைக்கும். ஆயுர்வேத எண்ணையில் இது மிக முக்கியப்பங்கு வகிக்கிறது.
இது நரம்பு மண்டலத்தை அமைதிபடுத்துகிறது. உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளை கையாளுவதில் சிறப்பாக செயல்படுகிறது. உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்கிறது.
வயதானதோற்றத்தைத் தடுக்கிறது. திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இளமையைத் தக்க வைக்கிறது.
ஆரேக்கியமான தூக்கத்தைத் தருகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இது வரப் பிரசாதமாகும். நல்ல தூக்கத்தின்னால் ஹார்மோன்கள் சமநிலைப் படுத்தப்படுகிறது.
செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. ஊட்டச்சத்துக்கள் உடலில் நன்றாக உறிஞ்சப்பட்டு செரிமானம் மேம்படுகிறது. பசியின்மை, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் போன்றவற்றை நீக்கி மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது.
இது குஷ்டரோகத்தைக் குணப்படுத்தக் கூடியது.
சிறுநீரகத் தொற்றை நீக்கக் கூடியது.
இதன் கொட்டையை நெய்யில் வறுத்து உண்ண, பாலின உறவு மேம்படும்.
கண்பார்வை தெளிவுபெற இதன் கொட்டைகளை உட்கொள்வது நல்லது.
இதன் பொடி சோம்பலை விரட்டி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.
நம் உடலின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் எந்தவித பக்கவிளைவும் ஏற்படுத்தாத இந்த மூலிகையைப் பயன்படுத்தி சிறந்த ஆரோக்கியம் பெறுவோம்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference