சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை.. மங்குஸ்தான் பழத்தில் இவ்வளவு விஷயங்களா?

சுவை மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் சுரங்கமாகவும் விளங்கும் மங்குஸ்தான் பழம், உடலில் உள்ள நீண்ட கால உபாதைகளை எப்படி குணப்படுத்துகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
Mangosteen benefits Tamil
Mangosteen benefits Tamil
Updated on

'பழங்களின் ராணி' என்று அழைக்கப்படும் பழம் மங்குஸ்தான் (Mangosteen). ஊதா நிறத்தோற்றமும், வெள்ளை நிற சதைப்பகுதியும் கொண்ட இந்த பழத்தில் அதிகளவு மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

இது தென்கிழக்கு ஆசியாவில் விளைகிறது. தென்இந்திய மலைப்பகுதியில் இது தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது.

மங்குஸ்தான் ஆரோக்கியமான மற்றும் மிகவும் சுவையான வெப்ப மண்டல பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தடிமனாகவும், உள்ளே வெள்ளை நிற இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவை கொண்ட சுளைகளைக் கொண்டுள்ள சத்தான பழம். இப்பழத்தில் தலை முதல் கால் வரை அனைத்திற்கும் ஏற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த பழம்.

இதில் வைட்டமின் சி, நார்ச்சத்தும், சாந்தோன்கள் எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அலர்ஜி தோல் மற்றும் ஈறுநோய்களை குணப்படுத்தவும், உடலை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதால் புண்கள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவை குணமாகும். செரிமானத்தை சீராக்கும்.

மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதால் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு கண்கள் வறட்சியடைந்து எரிச்சல் உண்டாக்கும். இதனால் தலைவலி, கழுத்து வலி என வருபவர்களுக்கு இதை சாப்பிட்டு வந்தால் எரிச்சல் நீங்க கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

மங்குஸ்தான் பழத்தில் எலும்புகளை பலப்படுத்தக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பழம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதாகவும் விளங்குகிறது.

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

மூல நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் இதனை சாப்பிட்டு வர சரியாகும்.

இதையும் படியுங்கள்:
மருத்துவக் குணமிக்க மங்குஸ்தான் பழம்!
Mangosteen benefits Tamil

இப்பழம் இருமலை தடுக்கும். சூதக வலியையும் குணமாக்கும். தலைவலியைப் போக்கும். நாவறட்சியை தடுக்கும் ஆற்றுலும் இதற்கு உண்டு. சிறுநீர் நன்கு வெளியேற சிறந்த மருந்தாகும்.

மங்குஸ்தான் பழத் தோலை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் வாய் துர்நாற்றம நீங்கும்.

வயிற்றுப் புண், வாய்ப்புண் குணமாகும். சீத பேதி குணமாகும்.

மங்குஸ்தான் பழம் சாப்பிட வீக்கத்தை குறைக்கும். புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயதான தோற்றத்தை குறைக்கவும், தோல் சுருக்கத்தை கட்டுப்படுத்தவும், பாக்டீரியா மற்றும் வைரஸுக்கு எதிராகவும் பயன்படுகிறது. உடல் சூட்டை தணித்து தேகத்தை சம நிலையில் வைத்திருக்கும்.

எலும்பு பலவீனம், எலும்புகள் பலம் குன்றி காணப்படுவது, எலும்பு தேய்மானம் போன்றவற்றிற்கு இந்த பழம் சிறந்த மருந்தாக விளங்குகிறது. வயதானவர்களுக்கு முழங்காலில் ஏற்படும் வலி, பலவீனத்தை பலப்படுத்தவும் இப்பழம் சிறந்த மருந்தாக செய்கிறது.

இது குற்றாலம் போன்ற மலைவாச ஸ்தலங்களில் அதிகம் விற்கப்படுகிறது.

இதன் விலை அதிகம் என்றாலும் இப்பழத்தின் மருத்துவ குணத்திற்காக வாங்கி சாப்பிடலாம்.

logo
Kalki Online
kalkionline.com