பழங்கால ரகசியம்: இதயத்தை இரும்பு போல மாற்றும் இந்த எண்ணெய்!

wood pressed oil health
wood pressed oil health
Published on

ரச்செக்குகளில் எண்ணெய் வித்துக்களைப் போட்டு மாடு பூட்டி அதில் எண்ணெய் ஆடி எடுத்து பயன்படுத்திய காலம் ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். ஏனென்றால், மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்தியபோது சர்க்கரை வியாதி இல்லை, இரத்தக்கொதிப்பு இல்லை, இருதயக் கோளாறுகள் இல்லை. இவை எல்லாம் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. காலங்கள் மாறிட, நம் கலாசாரமும் மாறியது. அதனால் நாம் பெற்றது என்னமோ பலவிதமான வியாதிகளைத்தான் என்று சொன்னால் மிகையில்லை. இன்றும் ஒருசில இடங்களில் மரச்செக்கு எண்ணெய்கள் கிடைக்கின்றன அவற்றின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

பலவிதமான எண்ணெய்கள் இயந்திரத்தின் மூலம் தயாரிப்பதால் அவை சூடாகி அவற்றில் உள்ள உயிர் சத்துக்கள் அனைத்துமே நீக்கப்பட்டு, வடிகட்டி பார்ப்பதற்கு பளிச்சென்று நமக்கு பாக்கெட்டில் கிடைக்கின்றன.

மரச்செக்கு மூலம் எடுக்கப்படும்  எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் செக்கானது வாகை மரத்தினால் செய்யப்படும் ஒன்றாகும். அதனை நமது முன்னோர்கள் மாடு பூட்டி இழுத்து அதனை இயற்கை முறையில் தயாரிப்பதனாலே அவை நம் உடலுக்கு நன்மையை கொடுக்கின்றன. மேலும், மன அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.

மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தேவையில்லாத கொலஸ்ட்ராலை அது நீக்குகிறது.

இதையும் படியுங்கள்:
இயற்கை அழகுப் பொக்கிஷம்: தாமரை எண்ணெயின் பயன்கள்!
wood pressed oil health

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது. அதுபோக உடல் சம்பந்தப்பட்ட அனைத்துக்குமே ஒரு தீர்வாக மரச்செக்கு எண்ணெய் அமைகிறது.

சுத்தமாக தயாரிக்கப்பட்ட செக்கு தேங்காய் எண்ணெய் உடல் பராமரிப்புகளுக்கும் முடி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் தீர்வை தருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com