
வேலிப்பருத்தி என்று அழைக்கப்படும் உத்தாமணி இலைகள் சர்வ சாதாரணமாக தெருவோரங்களில் விளைந்தாலும், இதன் மருத்துவப் பலன்கள் மகத்தானது.
மகப்பேற்றின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கினைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது உத்தாமணி இலைகள்.
உத்தாமணி இலைகளை சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால், குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
உத்தாமணி இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீருடன் பசும்பால் கலந்து குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். ரத்த அழுத்தம் சீராகும்.
உத்தாமணி இலைச் சாற்றைச் சிறிதளவு சுண்ணாம்புடன் கலந்து கால் வீக்கங்களுக்குப் பற்றாக போடலாம். வீக்கம், வலி இரண்டும் விரைவில் குணம் பெறும்.
மூட்டுவலி கட்டுப்பட, உத்தாமணி இலைச்சாற்றுடன் சம அளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து மேல்பூச்சாக வலி உள்ள இடத்தில் தடவ மிக விரைவில் குணம் ஆகும்.
பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிபருத்தி இலைசாற்றுடன் ஓரு தேக்கரண்டி தேன் கலந்து கொடுக்க மாதவிடாய் வயிற்று வலி சரியாகும்.
வேலிப்பருத்தி இலைச்சாறுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாதவலி, வீக்கம் குணமாகும். தொடக்க நிலையில் இருக்கும் யானைக்கால் நோய் இருந்தால் 48 நாட்களில் குணமாகும்.
சூதகவாயு, கீல்வாதம், வீக்கம், ஆஸ்துமா, தலைவலி போன்றவற்றிற்கென தயார் செய்யப்படும் மருந்துகளில் உத்தாமணியும் முக்கிய இடம் வகிக்கின்றது.
வயிற்றுப் புழுக்களின் ஆதிக்கத்தால், பிள்ளைகளைப் பசியின்மை வாட்டும்போது, உத்தாமணி இலைகளைக் குடிநீரில் போட்டுக் காய்ச்சி, அரைக் கரண்டியளவு கொடுக்க, புழுக்கள் வெளியேறிப் பசி அதிகரிக்கும்.
உத்தாமணி சாறுடன் ஊறவைத்த மிளகைப் பொடித்து, சிறிதளவு பாலில் கலந்து கொடுக்க, வாயுக் கோளாறு விலகும்.
சுவாசக் கோளாறுடன், வயிற்றுப் பிரச்னை, வயிற்று வலி, குளிர் காய்ச்சல், சளித் தொல்லை போன்ற பிரச்னைகளையும் இது போக்கும்.
இதன் இலையை பறித்து, இடித்து, சாறு பிழிந்து, தினமும், காலையில் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால், சுவாசப் பிரச்னை தீரும்; ஆஸ்துமா கட்டுப்படும்.
உத்தாமணி இலையை மையாக அரைத்து, அந்த விழுதை நகச்சுற்று பாதித்த இடங்களில் பூசி வந்தால் விரைவில் குணம் அடையும்.
உத்தாமணி, நொச்சி, பொடுதலை போன்ற மூலிகைகளை வதக்கிச் சாறு பிழிந்து, சிறு கரண்டி அளவு குழந்தைகளுக்குக் கொடுப்பது, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்..
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.